×
 

"ஒரு பதில் கூட இல்லை"..! மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்..! முக்கிய உத்தரவு..!!

நீட் தேர்வு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்தது.

நீட் விவகாரத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததால் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நீட் மோசடிகளை தடுக்க கடமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருக்கிறது. நீட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிவதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

நீட் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் தேர்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராதா கிருஷ்ணன் குழு பரிந்துரைகள் அடிப்படையில் நீர் தேர்வை நடத்துவதற்கு ஒரு நிர்வாக குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மேலும் நிர்வாக குழுவில் IIT, UGC, கேந்திரிய வித்யாலயாவின் பங்களிப்பு இருக்கவும், வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை நடத்துவதற்கு பதிலாக ஆண்டுக்கு பலமுறை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்து இருக்கிறது. மேலும், முக்கியமாக நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. நீட் தேர்வுக்கு முன்பும் பின்பும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!

நீட் வினாத்தாள்களை விநியோகிக்க விமானப்படை விமானங்களை பயன்படுத்துவது தற்காலிகமானது என்றும் அதனை தொடர முடியாது எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது, தேர்வுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: "நீட் வேண்டாம்"..! தமிழகத்தில் எதிரொலிக்கும் போராட்டம்..!! களமிறங்கிய அண்ணாமலை பல்கலை. மாணவர்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share