வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

காதல் விவகாரம்… இளைஞர் கொடூரக் கொலை… பெண்ணின் தந்தையை கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூரில் காதல் பிரச்சனையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாடு, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் முன்னோடியாக அறியப்படும் மாநிலமாக இருந்தாலும், சமீப நாட்களில் நிகழும் கொலை சம்பவங்கள் சமூகத்தின் ஆழமான காயங்களை வெளிப்படுத்துகின்றன. செப்டம்பர் 2025 மாதத்தின் முதல் பகுதியில் மட்டுமே, காதல் தொடர்பான ஆணவ கொலைகள், குடும்பப் பிரச்சினைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் என பல்வேறு வடிவங்களில் கொலைகள் பதிவாகியுள்ளன. இவை வெறும் தனிநபர் சம்பவங்களாக மட்டுமல்லாமல், சாதி, பாலியல், போதைப்பொருள் போன்ற சமூக பிரச்சினைகளின் பிரதிபலிப்புகளாகவும் உள்ளன. இந்தக் கொலை சம்பவங்கள், தமிழ்நாட்டின் சமூக நீதி கனவை சவால் விடுகின்றன. 

திருச்செந்தூரில் 30 வயது இளைஞர் ஒருவர் மர்ம நபரால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெறும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் காதல் விவகாரத்தில் கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.

திருச்செந்தூரில் உள்ள ஆந்தலைப் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான மணிகண்டன். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பெண்ணை மணிகண்டன் திருமணம் செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் உட்பட 3 பேர் சேர்ந்து மணிகண்டனை திட்டம் போட்டு தீர்த்துக் கட்டியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தங்கையின் காதலனை போட்டுத் தள்ளிய அண்ணன்… திருச்செந்தூர் கொலையின் பகீர் பின்னணி…!

இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொலைக்கு காரணமாக இருந்ததாக கூறி பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே, 3 சிறார்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது, பெண்ணின் தந்தை கைதாகி உள்ளார். இதனிடையே, தலைமறைவாகி உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தங்கையின் காதலனை போட்டுத் தள்ளிய அண்ணன்… திருச்செந்தூர் கொலையின் பகீர் பின்னணி…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी