தமிழ்நாடு ›

ரூ.42 கோடியில் புதுப்பிக்கப்பட்ட எழில்மிகு தொல்காப்பியர் பூங்கா… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு..!

42.45 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியர் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையின் அடையார் ஆறின் கரையில் அமைந்துள்ள தொல்காப்பியர் பூங்கா, இன்று நகரத்தின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் இடமாகத் திகழ்கிறது. இது வெறும் பூங்கா மட்டுமல்ல. இயற்கை சமநிலையை மீட்டெடுக்கும் ஒரு பெரிய முயற்சியின் விளைவாகும். முன்பு கட்டிடக் கழிவுகள், அழுக்கடுப்பிடம் மற்றும் சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இந்த 58 ஏக்கர் பரப்பளவு நிலம், இன்று பசுமையான காடுகள், ஈரநீர்நிலைகள் மற்றும் பறவைகளின் இடமாக மாறியுள்ளது.

தமிழ்நாட்டு அரசின் தூண்டுதலால் உருவான இந்தப் பூங்கா, தமிழின் பெரும்புலவரான தொல்காப்பியரின் பெயரால் அழைக்கப்படுகிறது. தொல்காப்பியர் பூங்காவின் பயணம் 2005ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது தமிழ்நாடு அரசு, 60 கோடி ரூபாய் நிதியுடன் இந்தத் திட்டத்தை அறிவித்தது.

அடையார் கிரீக் ஈக்கோ பார்க் லிமிடெட் என்ற சிறப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டு, நிதி மேலாண்மையைப் பொறுப்பேற்றது. 2006ஆம் ஆண்டு அக்டோபரில் அடையார் பூங்கா டிரஸ்ட் அமைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் தொடர்பான ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்பட்டு, மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெறப்பட்டது. அந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி, திறந்துவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: வேலைய கச்சிதமா முடிங்க… களத்தில் இறங்கிய முதல்வர்… அடையாறு முகத்துவாரத்தில் அதிரடி ஆய்வு…!

தற்போது 42.45 கோடி இந்த பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியர் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொல்காப்பியர் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இதையும் படிங்க: சின்னதா தான் முளைச்சு இருக்கா? அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு… ஃபெயிலியர் மாடல் DMK… இபிஎஸ் விமர்சனம்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी