வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

சீப்பை மறைத்தால் கல்யாணம் நிக்குமா.. தவெக தொண்டர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தம்! கடும் குற்றச்சாட்டு..!

தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வரும் தொண்டர்களை ஆங்காங்கே போலீசார் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் நகை திருட்டு புகார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில், திருபுவனம் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பல்வேறு நிபந்தனைகளோடு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதி கேட்டபோது வேறு தேதியிலும் அல்லது வேறு இடத்திலோ மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வடக்கு தொடரட்டும் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள நீதிபதி மறுத்து விட்டார். இந்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. போராட்டம் நடக்கும் இடத்திற்கு காலை முதலே ஏராளமான தொண்டர்கள் வரத் தொடங்கினர். சாரி வேண்டாம் மீதி வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகள் ஏந்தியவாறு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தினர் செயல்பாடுகளை திமுகவினர் தடுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கூட காவல்துறை தரப்பிலும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெறும் போராட்டத்தின் பங்கேற்பதற்காக வரும் தொண்டர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக வெற்றி கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மிகவும் வன்மையாக கண்டித்து உள்ளது.

இது ஆளும் கட்சியா அல்லது அராஜக கட்சியா என கேள்வி எழுப்பி உள்ளது. போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் தோழர்களை தன் கீழ் உள்ள காவல்துறையை வைத்து இந்த திறனற்ற திமுக அரசு தடுத்து நிறுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளது. சீப்பை ஒழித்து வைத்தால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று இந்த சர்வாதிகார அரசு நினைப்பதாக விமர்சித்துள்ளது.

இதையும் படிங்க: SORRY வேண்டாம் நீதி வேண்டும்!! விஜய் தலைமையில் போராட்டம்.. குவியும் தொண்டர்கள்..!

இதையும் படிங்க: லாக் அப் மரணங்கள் … உறவுகளை பறிக்கொடுத்தவர்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी