வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

டெல்லி முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை மக்கள் பாசத்தை திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு காமியுங்கள், கோபத்தை எடப்பாடியிடம் காமியுங்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அலங்காநல்லூரில் பேசினார். மதுரை சோழவந்தான் தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அலங்காநல்லூர் கேட்டுகடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பொதுமக்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களிடம் பேசியதாவது, மதுரை வந்தாலே உற்சாகம் தான் அன்பு பாசத்தை காட்டக் கூடிய மக்கள் இந்த மதுரை மக்கள் என்றும் உங்கள் பாசச்தை திமுக வேட்பாளர் வெங்கடேசனிடம் காட்டுங்கள், பகையை எடப்பாடிக்கு காட்டுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மதுரை மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், மதுரையில் திருப்பரங்குன்றத்தை வைத்து பாஜக பெரிய பிரச்சனை செய்ய நினைத்தது மதுரை மக்கள் அதனை அனுமதிக்கவில்லை என்றார். இந்த தொகுதியில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிகட்டு போட்டி நடைபெறும் பகுதி எனவும் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என கூறினார்.

இதையும் படிங்க: காலில் விழுந்தது தப்பு இல்ல… காலை வாரிவிட்டது தான் தப்பு..! எடப்பாடியை விமர்சித்த உதயநிதி..!!!

எடப்பாடி பழனிச்சாமி டெல்லி முரட்டு அடிமை என்றும் கூறினார். மத்திய பாஜக அரசை தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டும், தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது, பாசத்தை நமது வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு காட்டி வாக்களியுங்கள், கோபத்தை எடப்பாடிக்கு காமியுங்கள் என்றும் கூறினார்.

தொடர்ந்து, கூட்டத்தில் கூடியிருந்தவர்களில் ஒருவர் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி உதயநிதியை நோக்கி குரல் ஒலிப்பினர். இதனை கன்ட உதயநிதி குழந்தைக்கு "கயல்விழி " என பெயர் வைத்தார். 

இதையும் படிங்க: உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் MLA..! அண்ணாமலை விமர்சனம்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी