×
 

உதயநிதி ஸ்டாலின் கைது ஏன்? தவெக கொடுத்த புகாரில் என்ன இருக்கிறது? வெளியான முழு விவரம்!

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு காரணமான தவெக புகாரில் என்ன குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன? நடிகை த்ரிஷா பெயர், பெண்களை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் திமுக ஐடி விங் தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட முழு விவரம்.

தஞ்சாவூரில் காவிரி நீர் உரிமையை வலியுறுத்தி திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் தமிழக வெற்றி கழக (தவெக) மகளிர் அணி நிர்வாகி பைரவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவெக சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், காவிரி பிரச்சினை குறித்து பேசத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், பின்னர் தமிழ்நாடு முதலமைச்சரை குறிவைத்து தரக்குறைவான மற்றும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் இருந்த சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை முழக்கமிட்டபோது, அதற்கு அவர் அளித்த பதில் இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பேச்சு நடிகை த்ரிஷாவை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் இருந்ததாகவும், பெண்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் பல பெண்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: த்ரிஷாகிட்ட உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கணும்!! வெளுத்து வாங்கிய குஷ்பூ!

மேலும், சர்ச்சைக்குரிய பேச்சின் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரவச் செய்ததாகக் கூறி, திமுக ஐடி விங் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் பரப்பப்பட்டதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில் காவல்துறையினர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதேசமயம், இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மீது தற்போது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் கைது! பக்கத்து வீட்டில் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share