×
 

நிலவில் முதல் ஆய்வுத் தளம்! நாசாவின் திட்டத்தில் இணைய இஸ்ரோவுக்கு அமெரிக்கா அழைப்பு!.

நிலவின் தென் துருவத்தில் முதல் மனித ஆய்வுத் தளம் அமைக்கும் நாசாவின் திட்டத்தில் இணைய இஸ்ரோவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான நிரந்தர ஆய்வுத்தளத்தை அமைக்கும் தனது பிரமாண்ட திட்டத்தில் இணையுமாறு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) அமெரிக்காவின் நாசா அமைப்பு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது.

நிலவை நோக்கிய மனிதகுலத்தின் அடுத்தகட்டப் பாய்ச்சலாகக் கருதப்படும் இத்திட்டத்தில், இந்தியாவின் நிலவு ஆய்வுகளின் மகத்தான வெற்றியைக் கருத்தில் கொண்டு நாசா இந்த அழைப்பை விடுத்துள்ளது. சந்திரயான் திட்டங்கள் மூலம் நிலவின் தென் துருவத்தில் நீர் உறைபனியாக இருப்பதைக் கண்டறிந்த முதன்மைத் பெருமை இந்தியாவுக்கு உண்டு என்பதால், இஸ்ரோவின் பங்களிப்பு இந்த உலகளாவிய ஆய்வுத்தள உருவாக்கத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சீனாவை முந்தும் இந்தியா?! விண்வெளி வணிகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

நாசாவின் இந்த அழைப்பு குறித்து இந்திய விண்வெளித் துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த கூட்டுத் திட்டம் உறுதியாகும் பட்சத்தில், எதிர்காலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் நிலவில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு சாத்தியமாகும். மேலும், விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா உலகளாவிய முன்னணி சக்தியாகத் தனது இடத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது பெரும் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 2035ல் விண்ணில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்! இஸ்ரோ தலைவர் சொன்ன மாஸ் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share