பாஜக சார்பில் நெல்லையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். இந்த மாநாடு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்காக தச்சநல்லூரில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தர உள்ளார். இதையொட்டி பூத் கமிட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது வருகின்றன. கடந்த சில நாட்களாகவே மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அவை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நாளை நெல்லை வர உள்ள மத்திய உள்துறை அமைச்சரை வரவேற்கும் விதமாக நெல்லை நகர், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, டவுன், ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் பாஜகவினர் பேனர்கள் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லை ஆணவக்கொலை வழக்கு: உடந்தையாக இருந்த சுர்ஜித் சகோதரர் அதிரடி கைது..!!
இந்த பேனர்கள் சில இடங்களில் மாநகராட்சியில் அனுமதி பெறாமலும், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணாவுக்கு புகார்கள் வந்தது.
அதன் அடிப்படையில் நகரில் அனுமதியில்லாமல் ஆபத்து விளைவிக்கும் நிலையில் இருக்கும் பேனர்களை அகற்ற கமிஷனர் மோனிகா ரானா உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணியை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் துவக்கி உள்ளனர்.
இதையும் படிங்க: வீரத்தின் மறு உருவம்! சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு இபிஎஸ் மரியாதை…