வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

போன வேகத்தில் திரும்பிய இண்டிகோ விமானம்.. அவசர அவசரமாக தரையிறக்கம்.. கதிகலங்கிய பயணிகள்..!

மதுரைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து மதுரைக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. சிறிது நேரத்திலேயே அந்த விமானம் சென்னைக்கே மீண்டும் திரும்பியது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் நீண்ட நேரமாக வானிலேயே வட்டமடித்து உள்ளது. பிறகு விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டதுடன், பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஏற்கெனவே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விமானங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விமானங்கள் புறப்படுவதற்கு முன்பு கட்டாயமாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க: எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு.. மீண்டும் டெல்லிக்கே திரும்பிய விமானம்!!

அதன்படி நடந்த சோதனையில் ஒரே நாளில் ஏராளமான ஏர் இந்தியா விமானங்கள் தொழில் நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இண்டிகோ விமானம் தொழில் நுட்ப கோளாறால் தரையிறக்கப்பட்ட சம்பவம் பயணிகளை மேலும், அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதையும் படிங்க: ஏர் இந்தியாவை விடாது துரத்தும் கெட்ட நேரம்… ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து… பயணிகள் அச்சம்!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी