மழையால் தள்ளிப் போன EXAM… மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. யின் தேர்வு தேதி அறிவிப்பு…!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான கல்வி நிறுவனமாகும். இது 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, தமிழ்நாடு அரசால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மக்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிறுவப்பட்டது.
திருநெல்வேலி மாநகரில் உள்ள கொக்கிரகுளம் பகுதியில் மாவட்ட ஆட்சியக வளாகத்தில் முதலில் தொடங்கப்பட்ட இது, பின்னர் அபிஷேகபட்டியில் 520 ஏக்கர் பரப்பளவில் முக்கிய வளாகத்தைக் கொண்டு விரிவடைந்தது. மேலும், ஆழ்வார்குறிச்சியில் 120 ஏக்கர், பரமகல்யாணி கல்லூரியில் சுற்றுச்சூழல் அறிவியல் துறைக்கு 0.49 கி.மீ., மற்றும் ராஜக்கமங்கலத்தில் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்திற்கு 70 ஏக்கர் பரப்பளவு உள்ளது.
இப்பல்கலைக்கழகம் கலை, மொழி, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட 24 துறைகளைக் கொண்டுள்ளது. இதில் ஆங்கிலம், தமிழ், சமூகவியல், தொல்லியல், நூலகவியல், மேலாண்மை, வணிகவியல், பொருளியல், இதழியல், குற்றவியல், உளவியல், வரலாறு போன்ற பல்வேறு பாடப்பிரிவுகள் அடங்கும். இவை இளநிலை, முதுநிலை, எம்.பில், மற்றும் பிஎச்.டி படிப்புகளை (முழுநேர மற்றும் பகுதிநேர) வழங்குகின்றன. மேலும், தொழில் முனைவோருக்கான ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்புகள், திறன் வளர்ச்சி டிப்ளமோக்கள் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 109 இணைப்பு கல்லூரிகள், 9 மனோ கல்லூரிகள், மற்றும் ஒரு சட்டக் கல்லூரி உள்ளன.
இதையும் படிங்க: ஒன்னுமே புரியலையே! அரியர் தேர்வில் மாற்று வினாத்தாள்... குழம்பிய மாணவர்கள்...!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கனமழையின் காரணமாக நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழிக்கு பழி... திமுக நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்... 4 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்...!