வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

“கஜானா காலி”..! இது உங்க கவர்மென்ட்..!தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர்கள் நம்பிக்கை..!

போராடி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை ரிப்பன் மாளிகை வெளியே ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் என்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஆனந்த், முதல்வர் விஜய் உங்களுக்கு நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கையில் சிரித்த முகத்துடன் அமைச்சர்களை வரவேற்று இருக்கிறீர்கள் என்றும் பல ஆண்டுகளாக போராடியும் யாரும் கேட்காத நிலையில் தற்போதைய முதல்வர் மக்கள் முதல்வராக செயல்படுவார் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். பழைய ஆட்கள் கஜானாவை காலி செய்துள்ள நிலையில் மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் சேர்த்து கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்ற உறுதியளித்தார்.

மேலும் சிரித்த முகத்தோடு அமைச்சர்களாகிய எங்களை வரவேற்ற தூய்மை பணியாளர்களுக்கான அனைத்தையும் செய்வோம் என்றும் அமைச்சர் ஆனந்த் உறுதி அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர்கள் நிர்மல் குமார், எதற்கும் நீங்கள் கவலைப்படவோ கஷ்டப்படவோ வேண்டாம் என்றும் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இது உங்க கவர்மெண்ட் என்றும் நாங்கள் வேறு யாரும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்றுடன் என்டு கார்டு?… தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை முடிக்க களமிறங்கும் தவெக அமைச்சர்கள்…!

தூய்மை பணியாளர்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்யப் போகிறோம் என்றும் கேட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இது தூய்மை பணியாளர்களின் போராட்டம் போல் அல்ல என்றும் மாநாடு போல் உள்ளது எனவும் தெரிவித்தார். 15 நாட்களாக யாருக்கும் இடையூறின்றி ராணுவ ஒழுக்கத்துடன் தூய்மை பணியாளர்கள் போராடினார்கள் என்றும் அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் கூறினார். 

இதையும் படிங்க: வலுக்கும் போராட்டம்… தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை.!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी