×
 

நெருங்கும் தேர்தல் முடிவுகள்..! அடுத்தடுத்த ஆன்மீகப் பயணம்..! சீரடிக்கு புறப்பட்ட விஜய்..!

சீரடி சாய்பாபா கோவிலுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புறப்பட்டு சென்றார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்த அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்முறையாக இந்த தேர்தலை சந்திக்கிறார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

விஜய் மாற்றத்திற்கான முகமாக இருப்பார் என்று பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் சொல்லி வருகின்றனர். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், அடுத்ததாக தேதி சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இவை அவரது பக்தி நிலையையும், ஆன்மீக நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த செய்தி, தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யின் நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த பின்னர், சாலை மார்க்கமாக கோவிலை அடைந்த அவர், அங்கு அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்தார்.

இதையும் படிங்க: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

கோவில் நிர்வாகம் அவருக்கு புனித வேல் ஒன்றைப் பரிசாக அளித்து கௌரவித்தது. பெரும் பக்தர் கூட்டம் அவரைப் பார்க்க குழுமியிருந்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த வருகை, த.வெ.க தலைவரின் ஆன்மீகப் பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்தது. விஜய் திருச்செந்தூர் முருகனை தரிசித்த பின்னர், அவரது அடுத்த ஆன்மீக இலக்காக விஜய் சீரடிக்கு செல்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் அகிலிய நகர் மாவட்டத்தில் சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புறப்பட்டார் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலமாக சீரடி செல்லும் விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: "வெற்றி, தோல்வி சகஜம்"..! இணையதள பதிவுகள் அதிர்ச்சியை கொடுக்குது..! ஓய்வு பெற்ற நீதிபதி கருத்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share