மடப்புரம் அஜித்குமார் மீது பேராசிரியை நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை வாபஸ் பெற அவர் சம்மதம் தெரிவித்துள்ளதால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த வழக்கு மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது, சிபிஐ விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிகிதா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு அடகு கடைகளிலும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நகை இதுவரை ஏன் கிடைக்கவில்லை என்று அவர்களுக்கும், எங்களுக்கும் தெரியவில்லை. நான் புகார் அளித்த அஜித் குமார் தற்போது உயிரோடு இல்லை, எனவே இந்த வழக்கை நடத்தி நகை கிடைத்தாலும் அதை போடக்கூடிய மனநிலையில் நான் இல்லை.
என்னுடைய தாய்க்கு வயதாகி விட்டதால் நான் நீதிமன்றம் சென்று அலைய முடியாது.இதன் காரணமாக நகை திருட்டு புகார் தொடர்பான வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஒப்புக்கொண்டேன்.
இதையும் படிங்க: எங்கும் கொலை... எப்போதும் கொலை.. ஒரு நாளாச்சு வாய தொறந்தாரா ஸ்டாலின்? இபிஎஸ் கண்டனம்..!!
ஒவ்வொரு அதிகாரிகள் அழைக்கும் நகை கிடைத்துவிடும் என்று நம்பி தான் வந்தேன்.
மகாபாரதத்தில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்தது போல், ஒவ்வொரு முறையும் எதிர்பாராத இடங்களில் எல்லாம் தாக்குதல்கள் வந்தது.
மகாபாரதத்தில் அபிமன்யு சக்கர வியூகத்தில் உள்ளே செல்வார்கள், ஆனால் வெளியில் வர தெரியாது, அதற்காக அவருடைய தர்மம் பொய் என்று அர்த்தம் கிடையாது. அஜித் குமாரிடம் கார் கொடுத்ததால் அவர் மீது சந்தேகப்பட்டு புகார் கொடுத்தேன்.
இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டாம் என்னுடைய பணி போய்விடும் என்றும் மூன்று முப்பது மணிக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் நான் கார் கொடுத்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அஜித்குமார் நேரடியாக என்னிடம் சொன்னார்.
எனவே அந்த நம்பிக்கையும் நகை கிடைத்து விடும் என்று நினைத்தேன்.ஆனால் நகை கிடைக்காவிட்டாலும் உயிரை விட அது பெரிதல்ல என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க: விஜய் துணை முதல்வரா? NDA கூட்டணியில் அதிரடி திருப்பமா? நயினார் பளீச் பதில்..!!