வாக்காளர் திருத்த பணிகளை திமுக அரசும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டமும் இன்று நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஒரு சூழ்ச்சி என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக தெரிவித்தார். பாஜக ஏதோ பூதத்தை கொண்டு வந்தது போல கொடிபிடித்து திமுகவினர் போராட்டம் நடத்துவது ஏன் என கேள்வி எழுப்பினார். கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்பு பத்து முறையும், அதற்குப் பிறகு மூன்று முறையும் வாக்காளர் திருத்த பணிகள் நடந்து இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

நாட்டில் இதற்கு முன்பு வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் நடைபெறவில்லையா என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். எஸ் ஐ ஆர் நடவடிக்கை என்றால் என்னவென்றே துணை முதலமைச்சர் உதயநிதிக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் ரிவிஷனை ரெஸ்ட்ரிக்ஷன் என்ற துணை முதலமைச்சர் உதயநிதி கூறுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: #Breaking காவலர் குடியிருப்பில் படுகொலை... திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய அண்ணாமலை!
எஸ் ஐ ஆர் நடவடிக்கைக்கு எதிராக கொடி பிடித்து போராடி மக்களை திமுக அரசு ஏமாற்று பார்ப்பதாகவும் விமர்சித்தார். கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள் இருப்பதாகவும் இது போன்ற போலி வாக்காளர்களை நீக்கவே சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: உட்கட்சி பூசலுக்கு உடனடி தீர்வு!! மண்டல பொறுப்பாளர்களுக்கு ஸ்டாலின் கறார் உத்தரவு!!