தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், மார்ச் 30 முதல் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்கினர். இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அறிவித்த தேர்தல் அட்டவணையின்படி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்க உள்ளனர்.
இதில் ஆண்கள் சுமார் 2.77 கோடியும், பெண்கள் சுமார் 2.89 கோடியும் அடங்குவர். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 12.51 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.

பல்வேறு அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. இதேபோல் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக அதிமுக சார்பில் களமிறங்கி இருக்கும் ராயபுரம் மனோ வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: வேட்புமனு பரிசீலனை மும்முரம்..! துணை முதல்வர் உதயநிதி, நயினார் உள்ளிட்டோர் மனுக்கள் ஏற்பு..!!
காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. இதேபோல் திரு வி க நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: மீண்டும் கொளத்தூர் தொகுதி..! முதலமைச்சர் ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்பு..!!