தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக அலைக்கடலென தொண்டர்கள் குவிந்துள்ளனர். மாநாட்டிற்காக வந்திருந்த தொண்டர்கள் சீமான் ஒழிக என முழக்கங்களை எழுப்பினர். காரணம் என்னவென்றால் விஜய்யை கடந்த சில நாட்களாக அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கோனேரி கொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியபோது தமிழக வெற்றிக்கழக தொண்டர்களை கிண்டல் அடித்து பேசினார்.

தமிழக வெற்றி கழக தொண்டர்களிடம் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் தளபதி தளபதி என்று கத்துவதாக கூறினார். அது தனக்கு தலைவிதி தலைவிதி என்று கேட்பதாக கிண்டல் அடித்தார். மேலும் மேலும் சரி எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டால் TVK TVK என்ன கத்துவதாகவும் டீ விற்கவா இவ்வளவு பேர் கிளம்பி வந்து இருக்கிறீர்கள் என்றும் சீமான் கிண்டல் அடித்தார்.
இதையும் படிங்க: நீ அரியணை ஏறும் நாள் வரும்… வானமே எல்லை! விஜயின் தாயார் ஷோபா உருக்கம்
புலி வேட்டைக்கு செல்லும்போது வழியில் அணில்கள் கோரி ஓடுவதாகவும் பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள் என்றும் தெரிவித்தார். அணிலே ஓரமாய் போய் விளையாடு., குறுக்கே வராது என்றும் அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை என்றும் சீமான் பேசினார்.
விஜயின் ரசிகர்களை சீமான் அணில் என்று பேசி இருப்பது தமிழக வெற்றி கழக தொண்டர்களிடையே எரிச்சலை உண்டாக்கியது. இந்த நிலையில் மாநாட்டிற்காக மதுரையில் குவிந்துள்ள தவெகவினர் சீமான் ஒழிக என முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: நான்லாம் பாத்ததுமே எஸ்கேப்! கொடிக்கம்பம் விழுந்ததை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி…