நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி மலை பாதை வழியாக வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் இன்று முதல் உதகைக்கு வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏற்கனவே உதகையிலிருந்து கல்லட்டி மலை பாதை வழியாக மசினகுடி செல்ல தடை விதிக்கபட்டுள்ள நிலையில் தற்போது அந்த மலை பாதையில் உதகைக்கு வரவும் தடை விதிக்கபட்டதை அடுத்து காவல் துறையினர் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இது தொடர்பாக சுற்றுலா பயணி ஒருவர் பேசுகையில், நீலகிரி மாவட்டம் உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மிகவும் ஆபத்தான மலை பாதை என்பதால் கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்ட வாகனங்களை தவிர வெளிமாவட்ட மற்றும் மாநில வாகனங்கள் உதகையிலிருந்து கல்லட்டி மலை பாதை வழியாக மசினகுடி செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. ஆனால் மசினகுடியிலிருந்து கல்லட்டி மலை பாதை வழியாக அனைத்து வாகனங்களும் வர எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கல்லட்டி பாதையில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வெளிமாவட்ட மற்றும் மாநில வாகனங்கள் மசினகுடியில்இருந்து கல்லட்டி மலை பாதையில் உதகைக்கு வரவும் சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உள்ளது. இதனையடுத்து கடந்த மே ஒன்றாம் தேதி வரை சுற்றுலா வாகனங்கள் மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக உதகைக்கு வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
இதையும் படிங்க: ஆவின் பால் நஷ்டத்தில் இயங்குவது ஏன்? சாட்டையை சுழற்றும் முதல்வர் விஜய்! புதிய திட்டம் தொடக்கம்!
இதனால் மசினகுடி பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா தொழிலாளர்கள கடுமையாக பாதிக்கபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசினகுடி பகுதியில் மே மாதம் 8-ம் தேதி கடை அடைப்பு மற்றும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றதால் ஜூன் 1 ம் தேதி முதல் மசினகுடியில் இருந்த கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்கு சுற்றுலா வாகனங்கள் வர அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் 56 நாட்களுக்கு பின் இன்று முதல் மீண்டும் கல்லட்டி மலை பாதையில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்கள் உதகைக்கு வர தடை விதிக்கபட்டுள்ளது.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! துபாய் டூரிஸ்ட்களுக்கு ஜாக்பாட்..! சுற்றுலாவை ஊக்குவிக்க சூப்பர் பிளான்..!!