வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தென்கிழக்கு வங்க கடலில் நிலை வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக உருமாறிய நிலையில், அது தீவிர புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வடமேற்கு திசையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் மோந்தா புயல் நாளை ஆந்திரா மாநிலம் காக்கி நாடா அருகே கரையைக் கடக்கும் எனக்கூறப்படுகிறது.
மோன்தா புயல் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே நாளை இரவு கரையை கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு நோக்கி நகரும் எனவும் கூறப்பட்டுள்ளது. புயல் நகரும் வேகம் அதிகரித்திருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டிற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்... நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... சுழட்டி அடிக்க போகுது...!
இதனிடையே சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழையால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: மோன்தா புயல் சென்னையை நெருங்கியாச்சு... உஷார் மக்களே...! அடிச்சு நகர்த்தப்போகுது...!