தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மலையின் முன்பகுதியில் இந்துக்களின் பெருமாள் கோவிலும், 500 மீட்டர் தொலைவில் இஸ்லாமிய மக்களின் சஞ்சீவி மலை பாபா தர்காவும் உள்ளது.
சஞ்சீவி மலை பாபா தர்காவில் இன்று இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு அசைவ விருந்து படைப்பதாக கூறி இந்து அமைப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து தேசியக் கொடியுடன் வருகை புரிந்த நிலையில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள வ.உ.சி சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து விட்டு தர்கா இருக்கும் இடத்திற்கு செல்ல முற்பட்டனர்.
இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் தேசியக் கொடியுடன் தர்காவிற்கு செல்ல முயன்ற பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்பினரை தடுத்து நிறுத்தினர்.
இதையும் படிங்க: சாம்பாரில் சாணி பவுடர்..! பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு தேவை... எச்சரிக்கும் வானதி சீனிவாசன்.!!
இதனால் வ.உ.சி சிலை அருகிலே தேசியக்கொடியுடன் அவர்கள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் பெருமாள் கோவில் அருகே உள்ள தர்காவில் அசைவ உணவு விருந்து படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு சைவ உணவே தயார் செய்யப்பட்டதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே மோதல் ஏற்படாத வண்ணம் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் 200.க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.2 லட்சத்திற்காக இப்படியா?... இளைஞர் வாழ்க்கையை சீரழித்த பாஜக பிரமுகர்... தட்டித்தூக்கிய போலீஸ்...!