தமிழ் புத்தாண்டை ஒட்டி பிரதமர் மோடி என்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துடன் தொடர்புடைய முக்கிய நிகழ்வில் கலந்துகொண்டார். துணை குடியரசு தலைவர் இல்லத்திற்கு சென்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.
அவர் இந்தியாவின் துணைக்குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் இல்லத்தில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு துணைக்குடியரசுத் தலைவரை சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அவர்களின் பூஜை அறையில் வழிபாட்டிலும் ஈடுபட்டார்.

இந்த கொண்டாட்டம் தமிழ் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் புதிய ஆண்டின் தொடக்கத்தை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்தது. பிரதமர் மோடி தமிழ் மக்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர் தமிழ் புத்தாண்டு சமயத்தில், அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தார்.
இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு: முதல் ஆளாக தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி... இபிஎஸும் வாழ்த்து சொல்லிட்டாரு...!
மேலும், தமிழ் பண்பாட்டின் சிறப்பை பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ள அவர், இந்த ஆண்டு கொண்டாட்டத்திலும் தமிழ் மக்களின் உழைப்பு, இயற்கையுடனான இணக்கம் மற்றும் பாரம்பரிய மரபுகளை பாராட்டினார்.துணைக்குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், இந்த நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சிறப்பு சேர்த்தது. பிரதமர் மோடியின் இந்த பங்கேற்பு, மத்திய அரசின் தமிழ் பண்பாட்டு மற்றும் மொழி மரியாதையை வெளிப்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!