பொங்கல் பண்டிகை தமிழர்களின் இதயத்தில் மிக ஆழமாக வேரூன்றிய திருநாள். இது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. நமது முன்னோர்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்த வாழ்க்கை முறையின், உழைப்பின் மகிமையின், நன்றியுணர்வின் அழகிய வெளிப்பாடு. தை மாதம் பிறந்தால் வாழ்வில் வழி பிறக்கும் என்பார்கள்.
அந்தத் தைப்பிறப்பின் முதல் நாளில் தொடங்கி நான்கு நாட்கள் நீளும் இந்தப் பண்டிகை, வெறும் தேதிகளின் தொகுப்பு அல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கைத் தத்துவத்தை உள்ளடக்கியது. பொங்கல் என்பது வெறும் அறுவடைத் திருநாள் மட்டுமல்ல. அது இயற்கையோடு இணைந்து வாழ்வது எப்படி, உழைப்புக்கு மதிப்பு கொடுப்பது எப்படி, குடும்பத்தையும் உறவுகளையும் மதிப்பது எப்படி என்பதை நினைவூட்டும் ஒரு பெரிய பாடம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை சர்வதேச விழாவாக கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி என்று கூறினார்.. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் தெரிவித்தார். உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் தேர்தல் களம்... வரும் 23ல் பிரதமர் மோடி மதுரை வருகை...!
மனித உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையிலான நெருக்கத்தை காட்டும் பண்டிகை பொங்கல் என்றும் கூறியுள்ளார். வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளத்தை பொங்கல் பண்டிகை திகழ்கிறது என்றும் தைத்திருநாள் அனைவரின் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு மற்றும் வெற்றி நல்ல ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும் எனவும் பிரதமர் மோடி வாழ்த்தி உள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார்.. காரணம் இதுதான்..!! டிரம்ப் வேதனை..!!