பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

பள்ளிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உண்டு. ஆனால், பள்ளிகளில் கூட பாலியல் தொல்லை தலை தூக்குவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் சம்பவமாக நிகழ்கிறது. தற்போது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை நீலாங்கரை பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் முழு உருவச் சிலை திறப்பு..! மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்..!
சிலம்பம் பயிலச்சென்ற சிறுமிக்கு சிலம்ப ஆசிரியர் திருநாவுக்கரசு என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. சிலம்பம் கற்றுக்கொடுக்கும் போது தகாத முறையில் சிறுமியிடம் நடந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் போலீசில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிலம்பம் ஆசிரியர் திருநாவுக்கரசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பெட்டி பெட்டியாக வெடிபொருட்கள் பறிமுதல்... தர்பூசணி பழங்களின் அடியில் காத்திருந்த அதிர்ச்சி..!