திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கீழக்குன்னுப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார், லாரி டிரைவர். அவரது மனைவி கிருத்தி கா இருவரும் காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பைக் மீற திருமணம் செய்து கொண்டவர்கள்.
இவர்கள் வயல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது வயலுக்கு அருகே சிவக்குமாரின் பெரியப்பா ஜோதிவேலுக்கும் வயல்கள் உள்ளன. இந்த வயல்களுக்கு ஒரு கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக நீண்ட நாட்களாகவே தகராறு இருந்து வந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த ஜூன் 29-ம் தேதி, கிருத்திகா தனது வயலுக்கு தண்ணீர் விட முயன்ற போது, அங்கு வந்த ஜோதிவேல் அவரைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த கிருத்திகா, துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், போலீசில் முறையிட்டார். அதே நேரத்தில் ஜோதிவேலும் தம்பதி மீது பதில்முறையீடு செய்துள்ளார்.
இதையும் படிங்க: காதலனை நம்பிச் சென்ற காதலி... நண்பர்களுக்கு விருந்தாக்கி சீரழித்த கொடூரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்...!
இதையடுத்து, துறையூர் காவல் நிலைய எஸ்ஐ சஞ்சீவி, கிருத்திகாவை விசாரணைக்காக அழைத்துள்ளார். ஆனால் அங்கு நடந்தது எதிர்பாராத அதிர்ச்சிகரமாக மாறியுள்ளது. கிருத்திகா அளித்த புகாரின் படி, எஸ்ஐ சஞ்சீவி, “உனக்கு ஏதாவது நடந்தா நான் பார்த்துக்கறேன்... ஆனா என் ஆசைக்கு உடன்படணும். இல்லாட்டி உன் மனுவை விசாரிக்காம எங்க வேண்டுமானாலும் அலைய வைக்கலாம்” என கேட்டதாக கூறப்படுகிறது.
போலீசிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையைக் கேட்டுநெஞ்சம் பதறிய கிருத்திகா, காவல் நிலையத்திலிருந்தே அழுதபடியே வீட்டிற்கு சென்றதாகவும், வெளி மாநிலத்தில் லாரி ஓட்டிக் கொண்டிருந்த கணவரிடம் இதனை அழைத்துத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
கிருத்திகா எஸ்ஐ சஞ்சீவியின் நடத்தை குறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். சுமார் 2 நிமிடத்திற்கு மேலான இந்த வீடியோவில் அவர் நேரடியாக போலீஸ் அதிகாரியின் மீதான புகாரை பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுபற்றி கிருத்திகா, திருச்சி எஸ்பி அலுவலகத்திலும் நேரில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓடும் பேருந்துக்குள் திடீரென அலறிய பெண்... சித்த மருத்துவர் செய்த கேவலமான காரியம்..!