×
 

ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

பேராவூரணி பேரூராட்சியில், டெண்டரில் முறைகேடு செய்த தி.மு.க., சேர்மன், அவரது கணவர் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் டெண்டர் முறைகேடு விவகாரத்தில் பெரும் அதிர்ச்சி! பேரூராட்சி தலைவர் சாந்தி (41, தி.மு.க.), அவரது கணவர் சேகர் (45, தி.மு.க. பேரூர் கழக செயலர்), மாமனார் செல்வராஜ் (60) உட்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பேரூராட்சியில் நடைபெற்ற பல்வேறு சாலை, குடிநீர், வடிகால் உள்ளிட்ட பணிகளுக்கான டெண்டர்களை சாந்தி, சேகர், செல்வராஜ் ஆகியோர் தங்கள் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் எடுத்து, 2 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செந்தில்குமார் 2025-ல் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட ஆய்வில் முறைகேடு உறுதியானது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால், நீலகண்டன் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்ததோடு, உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடர்ந்தார்.

இதையும் படிங்க: தமிழக பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு!

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மார்ச் 11 அன்று அய்யம்பேட்டையில் சோதனை நடத்தினர். இதில்,

  • பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி,
  • அவரது கணவர் சேகர்,
  • மாமனார் செல்வராஜ்,
  • முன்னாள் செயல் அலுவலர் பழனிவேல் (53),
  • முன்னாள் இளநிலை பொறியாளர் தாமஸ் ஆனந்த் (50, தற்போது திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் பணி),
  • தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ஜமுனாராணி (44),
  • புகார் அளித்த நீலகண்டன் (44)

ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் முறைகேடு, உறவினர்கள் மூலம் பணம் சம்பாதிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இந்த வழக்கு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தகைய முறைகேடு விவகாரங்கள் அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

இதையும் படிங்க: வேண்டாத வேலை! வாயை விட்டு மாட்டிக்கொண்ட கருணாஸ்! கொந்தளிக்கும் அமைப்புகள்! வலுக்கும் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share