×
 

திமுக, அதிமுக, தவெக, நாதக!! 2026ல் அரியணை ஏறுவது யார்? உளவுத்துறை சர்வேயில் பெரிய ட்விஸ்ட்!!

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி 234 தொகுதிகளிலும் மத்திய உளவுத்துறை பெரிய அளவில் சர்வே எடுத்துள்ளது.


சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலையொட்டி மத்திய உளவுத்துறை (IB) நடத்திய பெரிய அளவிலான சர்வே முடிவுகள் திமுகவை அதிர வைத்துள்ளன. கரூர் சம்பவத்துக்கு பிறகு இரு கட்டமாக நடத்தப்பட்ட இந்த சர்வேயில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 70 தொகுதிகளில் முதலிடம் பிடிக்கிறது. திமுக கூட்டணி 90 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 

அதிமுக-பாஜக கூட்டணி 35 தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், மீதமுள்ள 38 தொகுதிகளில் இழுபறி நிலை இருப்பதாகவும் சர்வே தெரிவிக்கிறது. இதனால் 2026-ல் தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு அதிகம் என்று முடிவு கூறுகிறது.

கரூர் சம்பவத்துக்கு (செப்டம்பர் 27, 2025) முன்பும் பின்பும் நடத்தப்பட்ட இந்த சர்வே, தவெகவின் செல்வாக்கு எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. வன்னியர், பட்டியலினத்தவர் அதிகமாக வசிக்கும் வட மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது. 
சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை போன்ற மாநகராட்சி பகுதிகளில் உள்ள 15 தொகுதிகளிலும் தவெகவின் கோடி பறக்கிறது. கொங்கு பெல்ட்டில் கரூர், கோவை மாவட்டங்களில் 5 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: உரிமைகள் தொடர்ந்து பறிபோகும்!! அவமானம், அத்துமீறல்கள் தொடரும்! தி.குன்றம் விவகாரம்! பவன் கல்யாண் கண்டனம்!

தென் மண்டலத்தில் தேனி போடிநாயக்கனூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 10 தொகுதிகளில் தவெகவுக்கு குறிப்பிடத்தக்க ஓட்டு வங்கி உள்ளது. கிறிஸ்தவர், மீனவர் அதிகமாக வசிக்கும் கடலோர தொகுதிகளான குளச்சல், கிள்ளியூர், நாகப்பட்டினம், வேதராண்யம், தூத்துக்குடி போன்றவற்றிலும் தவெக முன்னிலை வகிக்கிறது. 

முக்குலத்தோர், நாயுடு சமுதாயம் அதிகமாக உள்ள தொகுதிகளில் தவெகவுக்கு சாதகமான சூழல் இருக்கிறது. ஆனால் நாடார், தேவேந்திர குல வேளாளர் அதிகமாக உள்ள தொகுதிகளில் தவெகவுக்கு பெரிய அளவில் ஓட்டு இல்லை என்று சர்வே கூறுகிறது.

திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. ஆனால் அங்கும் தவெகவுக்கு இழுபறி நிலைதான். மொத்தத்தில், திமுக கூட்டணி 90 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 

அதிமுக-பாஜக கூட்டணி 35 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. மீதமுள்ள 38 தொகுதிகளில் யாருக்கு வெற்றி என்று தெரியவில்லை. இதனால் 2026-ல் தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு அதிகம் என்று மத்திய உளவுத்துறை சர்வே முடிவு அடித்துச் சொல்கிறது.

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து உதவி அளித்தது, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் போன்ற மூத்த தலைவர்கள் இணைந்தது, புதுச்சேரி பொதுக்கூட்ட அனுமதி போன்றவை தவெகவின் செல்வாக்கை உயர்த்தியுள்ளன. 

இந்த சர்வே முடிவுகள் திமுகவை அதிர வைத்துள்ளது. திமுக தலைமை இதை தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 2026 தேர்தல் தமிழக அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: 100 வருஷ கோயிலை இடிச்சிருக்கேன்! ஓட்டு எப்பிடி வரவழைக்கிறதுனு தெரியும்! வைரலாகும் டி.ஆர்.பாலு வீடியோ!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share