×
 

உரிமைகள் தொடர்ந்து பறிபோகும்!! அவமானம், அத்துமீறல்கள் தொடரும்! தி.குன்றம் விவகாரம்! பவன் கல்யாண் கண்டனம்!

ஹிந்துக்கள் ஜாதி, மற்றும் மொழி தடைகளால் பிளவுபட்டிருக்கும் வரை கேலிகள், அவமானங்கள், அத்துமீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடரத்தான் செய்யும் என பவன் கல்யாண் கூறினார்.

சென்னை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப சர்ச்சை தமிழகத்தில் மத அரசியலை சூடேற்றி வரும் நிலையில், ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார். 

“ஹிந்துக்கள் தங்கள் உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை வந்துவிட்டது வெட்கக்கேடு. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஹிந்துக்கள் ஒன்றுபடாவிட்டால், உரிமைகள் தொடர்ந்து பறிபோகும்” என்று பவன் கல்யாண் எச்சரித்துள்ளார். திமுக அரசை நேரடியாகக் குறிப்பிடாமல், “ஹிந்து மத சடங்குகளை தடுப்பது அரசியல் சட்ட நீதிக்கு எதிரானது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பவன் கல்யாண் தனது அறிக்கையில், “முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானது திருப்பரங்குன்றம். கார்த்திகையில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது ஹிந்துக்களின் பண்டைய பாரம்பரியம். நீதிமன்றம் இரு முறை உத்தரவிட்ட பிறகும் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது. 

இதையும் படிங்க: இதுலாம் முதல்வர் பண்ணுற காரியமா? இவ்ளோ தப்பு பண்ணிட்டு சுப்ரீம் கோர்ட் எதுக்கு போறீங்க! அண்ணாமலை விளாசல்!

இது ஹிந்துக்களின் அடிப்படை் உரிமைக்கு எதிரானது. புனித நாளை தள்ளி கொண்டாட முடியுமா? இது போன்ற தொடர்ச்சியான அத்துமீறல்களை ஹிந்துக்கள்தான் ஏற்றுக்கொண்டு அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகிறார்கள்” என்று கொதித்தார்.

“சனாதன தர்மத்தை பாதுகாக்க ஒரு ஹிந்து தர்ம பாதுகாப்பு வாரியம் வேண்டும். மற்ற மதங்கள் தங்கள் உரிமைகளுக்கு ஒன்றுபடுவது போல ஹிந்துக்களும் ஜாதி, மொழி, பிராந்திய வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட வேண்டும்” என்று பவன் கல்யாண் வலியுறுத்தினார். 

“அரசியல் சட்டம் 25-வது பிரிவு ஹிந்துக்களுக்கு அடிப்படை உரிமையாக இல்லாமல் விருப்ப உரிமையாக மாறிவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார். அரசு, நிர்வாகம், போலி அறிவுஜீவிகள் மூலம் ஹிந்து மரபுகள் கேலிக்குள்ளாக்கப்படுவதாகவும், அதை தடுக்க ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் டிசம்பர் 1 அன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புடன் தொடங்கியது. பின்னர் டிவிஷன் பெஞ்ச் உறுதிப்படுத்தியும் தீபம் ஏற்கப்படவில்லை. போலீசார் பாஜக தலைவர்கள் உள்ளிட்ட 500 பேரை கைது செய்தனர். 

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதை “இந்து விரோதம்” என்று பாஜக, இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு ஆதரவாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவன் கல்யாணின் அறிக்கை, தமிழகத்துக்கு அப்பால் தேசிய அளவில் ஹிந்து ஒற்றுமை கோரிக்கையை எழுப்பியுள்ளது. “காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஹிந்துக்கள் விழித்தெழ வேண்டும்” என்ற அவரது அழைப்பு, 2026 தேர்தலுக்கு முன் மத அரசியலை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

திமுக அரசு “மதச்சார்பின்மை” என்று நியாயப்படுத்தி வரும் நிலையில், பவன் கல்யாணின் கடுமையான வார்த்தைகள் தமிழக அரசியலை மேலும் சூடேற்றியுள்ளன.

இதையும் படிங்க: ஓட்டு அரசியலுக்காக தாஜா செய்யும் திமுக!! வழிபாட்டு உரிமையை பறிக்குது!! பார்லி.,-யில் அனல் பறக்கும் விவாதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share