“அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் நம்பிக்கை தெரிவித்தார்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ் அதிமுக, அவினாசி தொகுதி(தனி)வேட்பாளர் எல்.முருகன் பாஜக ,குன்னூர் தொகுதி வேட்பாளர் சாந்தி ராமு அதிமுக, ஊட்டி தொகுதி வேட்பாளர் போஜராஜன் பாஜக, கூடலூர்(தனி) தொகுதி வேட்பாளர் பொன்.ஜெயசீலன் அதிமுக ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு கூடியிருந்த பெண்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். மேலும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய பிரச்சார வாகனத்தின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் வாகனத்தின் எஞ்சின் இருக்கும் பகுதியை திறந்து பார்த்து பிரச்சனையை சரி செய்தனர். அதன் பின்னர் பேச்சை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, தற்போது மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள தொகுதி மறு சீரமைப்பு சட்ட மசோதாவால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பேசினார்.
இறுதியாக தனது பேச்சை முடித்த அவர் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங் என்று பேசி தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: இனிமே இந்த இபிஎஸ் வேற மாதிரி இருப்பேன்..! பரப்புரையில் எடப்பாடி எச்சரிக்கை..!
இதையும் படிங்க: நெருங்கியது தேர்தல்..! கோவையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பரப்புரை..!!