நெருங்கியது தேர்தல்..! கோவையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பரப்புரை..!!
கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும். அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி முக்கிய எதிர்க்கட்சியாகக் களமிறங்கியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி இந்தக் கூட்டணியின் முகமாகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.அதிமுக மார்ச் 2026 இல் வேட்பாளர் பட்டியலை படிப்படியாக வெளியிட்டது.
முதல் கட்டமாக மார்ச் 25 அன்று 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் இ.பி.எஸ். எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். பல முன்னாள் அமைச்சர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றனர். இரண்டாம் கட்டமாக மார்ச் 27 அன்று 127 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மூன்றாம் கட்டமாக மார்ச் 29 அன்று 17 வேட்பாளர்கள் வெளியிடப்பட்டனர்.
இதையும் படிங்க: மாணவிக்கு வெட்டு..! ரத்த வெள்ளத்தில் துடிக்க வைத்த திமுக அரசு..! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..!!
இ.பி.எஸ். பிரச்சாரத்தை சென்னை மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் தொடங்கினார். இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கோவையில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோவை கிழக்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!