×
 

இனிமே இந்த இபிஎஸ் வேற மாதிரி இருப்பேன்..! பரப்புரையில் எடப்பாடி எச்சரிக்கை..!

கோவையில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை நடத்தினார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக செயல்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது திமுகவின் செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் குறித்து எடுத்துரைத்து வருகிறார். மேலும் அதிமுகவின் சாதனைகளையும் எடுத்துக் கூறி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் கூறி வருகிறார். கோவை மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் நடத்தி வருகிறார். காந்திபுரம் பகுதியில் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.

இதையும் படிங்க: நெருங்கியது தேர்தல்..! கோவையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பரப்புரை..!!

அப்போது பேசிய அவர், ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்றும் இனிவரும் எடப்பாடி பழனிச்சாமி வேறு விதமாக இருப்பார் என்றும் தெரிவித்தார். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர் அரசு அதிகாரிகள் நடுநிலையோடு நடக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பது கட்டாயம் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: மாணவிக்கு வெட்டு..! ரத்த வெள்ளத்தில் துடிக்க வைத்த திமுக அரசு..! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share