×
 

"மக்கள் குழப்பமடைய வேண்டாம்... அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்" - சர்ச்சைக்கு எண்டு கார்டு போட்ட தம்பிதுரை...!

கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரும் தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்கள் ஆனால் யாரும் கூட்டு மந்திரி சபை அமைக்கவில்லை. கூட்டணி என்பது வேறு ஆட்சியை யார் நடத்துவது என்பது வேறு.

மெகா கூட்டணி அமைப்பேன், அதிமுக தனியாக தான் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக கூறியுள்ளார். மக்கள் குழப்பம் அடைய வேண்டாம் என அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிந்தகம்பள்ளி கிராமத்தில் ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 17 லட்சத்தி 45 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பிலான புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியை மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார்.

அப்பொழுது பொதுமக்கள் மத்தியில் பேசிய தம்பிதுரை, எல்லாக் கட்சிகளும் தான் முதல்வர் என கூறிக் கொள்கிறார்கள். 2026 இல் அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமையும் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக கூறிவிட்டார். தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் அவ்வப்போது கூட்டணி வரும். தமிழகத்தில் ராஜாஜி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் ஆனால் கூட்டு மந்திரி சபை அமைக்கவில்லை,

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை... பாஜகவின் சதித்திட்டம்... அம்பலப்படுத்தும் செல்வப் பெருந்தகை...!

அதேபோல் அண்ணா கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் அவரும் கூட்டு மந்திரி சபை அமைக்கவில்லை அதேபோல் கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரும் தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்கள் ஆனால் யாரும் கூட்டு மந்திரி சபை அமைக்கவில்லை. கூட்டணி என்பது வேறு ஆட்சியை யார் நடத்துவது என்பது வேறு. ஆட்சியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் நடத்தும் அதில் மற்ற கட்சிகள் பங்கு பெறுவதற்கு இடமே கிடையாது.

எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக கூறியுள்ளார் மெகா கூட்டணி அமைப்பேன் திமுகவை வீட்டுக்கு அனுப்புவேன் என்று. நிறைய கட்சிகள் கூறுகின்றனர் நாங்கள் கூட்டு மந்திரி சபையில் பங்கேற்போம் என்று, அவர்களுக்கு ஆசை இருக்கலாம் ஆனால் அதிமுக தொண்டர்களும் சரி தமிழ்நாட்டு மக்களும் சரி கூட்டு மந்திரி சபையை என்றும் விரும்ப மாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி தான் அமையும், இதில் எந்தவித மாற்றமும் கிடையாது என உறுதியாக கூறுகிறேன். மக்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம் என பேசினார்.

இதையும் படிங்க: திணறும் BLO-க்கள்... லட்சக்கணக்கானோர் வாக்குரிமை பறிபோகும்... என்.ஆர் இளங்கோ எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share