×
 

ராஜ்யசபா தேர்தல்..!! அதிமுக சார்பில் அன்புமணி, தம்பிதுரை வேட்பு மனு தாக்கல்..!!

ராஜ்ய சபா தேர்தலை ஒட்டி அன்புமணி ராமதாஸ் மற்றும் தம்பி துரை, வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 5-ஆம் தேதியான இன்று கடைசி நாளாகும். அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவை ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஆளும் திமுக கூட்டணிக்கு நான்கு இடங்களும், எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணிக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும் நிலை உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக ஒரு முக்கிய கூட்டணிக் கட்சியாக உள்ளது. இதனால், அதிமுகவின் இரு இடங்களில் ஒன்று பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு இடத்தில் அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் மக்களவை துணைத்தலைவருமான எம். தம்பிதுரை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் அதிமுக சார்பில் தம்பி துரையும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தம்பிதுரை வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த நிகழ்வின்போது எஸ். பி வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்... ஜெயக்குமார் எச்சரிக்கை..!

அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக 2019 முதல் 2025 வரை பதவி வகித்தவர். அப்போது அவர் பாமக சார்பில் AIADMK ஆதரவுடன் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிமுக-பாமக கூட்டணி மீண்டும் வலுப்பெற்றுள்ள நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த மாநிலங்களவை இடம் பாமகவுக்கு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதன் மூலம் அன்புமணி ராமதாஸ் மீண்டும் மத்திய அரசியலில் தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.

இதையும் படிங்க: எதிரிகளுக்குள் செம டீலிங்… என்னால பிழைப்பு போய்டுச்சாம்..! திமுக, அதிமுகவை விளாசிய விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share