தமிழ்நாடு ›

அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்… ஜெயக்குமார் எச்சரிக்கை..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தமிழகத்தில் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் பச்சைத் துண்டுடன் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்து பேசி இருந்தார்.

தொடக்கத்தில் திமுகவை மட்டுமே விஜய் விமர்சித்து பேசி வந்த நிலையில், சமீப நாட்களாக அதிமுகவை வம்பெழுத்து வருகிறார். இன்றைய உரையில், மீண்டும் திமுக ஆட்சி என்ற சரித்திரமே இல்லை என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். எதிரிகள் வெளியில் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்ளலாம் என்றும் நமக்குள் டீல் முக்கியம் என்றும் விஜய் பிழைப்பு நடத்த விட மாட்டார் என்று அவர்கள் நினைப்பதாகவும் தெரிவித்தார்.

பழிமேல் பழி போட்டு கரூரில் ஆரம்பித்து ஜனநாயகன் ரிலீஸ் வரைக்கும் பிரச்சனை கொடுப்பதாகவும் கூறி இருந்தார். திமுக, அதிமுக கட்சிகள் டீலிங் வைத்திருப்பதாக மறைமுகமாக சாடி இருந்தார் விஜய். இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார். 

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு தோல்வி பயம்…! மகளிர் தொகை உயர்வுக்கு இதுதான் காரணம்… ஜெயக்குமார் விளாசல்..!

அதிமுகவை வம்பிழுத்தால் விஜய் வாங்கிக்கட்டிக்கொள்வார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார். விஜய் எப்படி அழைத்தாலும் எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணிக்கு செல்லவில்லை என கூறினார். ஆட்சியில் பங்கு தருகிறேன் என விஜய் அழைத்தும் ஒருவர் கூட செல்லவில்லை என்று விமர்சித்தார். திமுகவின் தோல்வி உறுதியாகி உள்ளது என்றும் அரசு பணத்தை மக்களுக்கு வாரி இறைத்தாலும் திமுகவின் தோல்வி உறுதி என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் என்ன தப்பு செஞ்சேன்… ஏன் கைவிட்டீங்க..! ஜெயக்குமார் ஆதங்கம்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी