×
 

கேட்டை இழுத்து மூடிய அதிமுக!! குழப்பத்தில் தவிக்கும் ஓபிஎஸ்!! திமுக போறதுதான் ஒரேவழியா?!

ஓபிஎஸ்ஸின் அரசியல் பயணம் எந்த திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற விவாதம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அரசியல் ரீதியாக மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஓபிஎஸ்ஸை கட்சியில் மீண்டும் இணைக்க மறுத்துவிட்டார். 

இதனால் ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அடுத்து என்ன செய்வது என்ற விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஓபிஎஸ் அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாகவும், "நான் தயாரா? பழனிசாமி தயாரா?" என்று வெளிப்படையாக கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் இபிஎஸ் தரப்பில் இருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை. தென் மாவட்டங்களில் உள்ள அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை கடுமையாக எதிர்க்கின்றனர். கடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பின்னடைவு, கட்சியில் நடந்த அதிகாரப் போட்டி, ஓபிஎஸ் தரப்பினரின் அலட்சிய போக்கு ஆகியவை இன்னும் மறக்கப்படாத துரோகமாக அவர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: உங்களுக்கு ரெண்டு சீட்டு! மகனுக்கு எம்.பி போஸ்ட்டு?! ஓபிஎஸ்-யிடம் டீல் பேசிய சேகர்பாபு! கசிந்தது சீக்ரெட் டீல்!

2021 தேர்தலில் சில இடங்களில் உள்ளடி வேலைகள் நடந்ததாகவும், வேட்பாளர்களை தோற்கடிக்க முயற்சி செய்ததாகவும் தென் மாவட்ட நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஒற்றைத் தலைமை என்ற கோஷம் தென் மாவட்டங்களில் இருந்து எழுந்தது. ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டார். இபிஎஸ் விரும்பினாலும், தென் மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை அனுமதிக்க தயாராக இல்லை.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பக்கம் செல்லும் யோசனைக்கு பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தவெகவுடன் கூட்டணி அமைத்தாலோ சேர்ந்தாலோ அதிமுக வாக்குகளை சிதறடிக்கலாம். ஆனால் ஓபிஎஸ்ஸுக்கும் ஆதரவாளர்களுக்கும் நேரடி பலன் கிடைக்காது என்று அவர்கள் கருதுகின்றனர்.

இதற்கு மாற்றாக திமுகவில் இணைவதே நடைமுறை வாய்ப்பு என்ற கருத்து மேலோங்கியுள்ளது. திமுகவில் சேர்ந்தால் ஓபிஎஸ்ஸுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவரது ஆதரவாளர்களில் சிலருக்கு சட்டமன்ற தொகுதி வாய்ப்பும் கிடைக்கலாம். ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு திமுகவில் இணைவதில் தயக்கம் உள்ளது.

மூன்று முறை அதிமுக முதல்வராக இருந்தவர் திடீரென திமுகவில் சாதாரண உறுப்பினராக மாறுவது சுய மரியாதைக்கு எதிரானது என்று அவர் நம்புகிறார். அது எதிர்காலத்தில் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என அஞ்சுகிறார்.

அதிமுக கதவு மூடப்பட்டு, மற்ற வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் ஓபிஎஸ் எடுக்கும் முடிவு அவரது அரசியல் வாழ்க்கையை மட்டுமல்ல, 2026 தேர்தல் களத்தையும் பெரிதாக பாதிக்கும். ஆதரவாளர்கள் பலர் ஏற்கனவே திமுக அல்லது வேறு கட்சிகளில் இணைந்து விட்டனர். நேரம் வேகமாக கரைந்து கொண்டிருக்கிறது. இறுதி முடிவு ஓபிஎஸ்ஸின் கையில்தான் உள்ளது.

இதையும் படிங்க: சொன்னபடி தை பிறந்தாச்சு!! வழி பிறக்குமா? இன்று கூட்டணியை அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்? யாருடன் கை கோர்ப்பு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share