×
 

2026 சட்டசபை தேர்தல்! அதிமுகவில் விருப்பமனு வழங்க இன்றே கடைசி நாள்!! இபிஎஸ் பெயரில் இத்தனை மனுக்களா?!

தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே துவக்கிய அதிமுக, இப்பொழுது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.

சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யும் பணி இன்று (டிசம்பர் 23) மாலையுடன் முடிவடைகிறது. கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கிய இந்த விருப்ப மனு வழங்கல் பணியில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு விருப்ப மனுவுக்கு ரூ.15,000 கட்டணமாகவும், புதுச்சேரி தொகுதிகளுக்கு ரூ.5,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு பெறுபவர்கள் வரைவோலை செலுத்தி, மனுவை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு விருப்ப மனுவுக்கு ரூ.15,000 கட்டணமாகவும், புதுச்சேரி தொகுதிகளுக்கு ரூ.5,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு பெறுபவர்கள் வரைவோலை செலுத்தி, மனுவை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: மெகா கூட்டணி கனவுக்கு பின்னடைவு!! விரக்தியில் எடப்பாடி பழனிசாமி! அதிமுகவினர் அதிருப்தி!

நேற்றும் முன்னாள் அமைச்சர்கள் ராமலிங்கம், கே.பி.அன்பழகன், அமைப்புச் செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு, பொள்ளாச்சி ஜெயராமன், ஏற்காடு எம்.எல்.ஏ. சித்ரா, கோயம்புத்தூர் சத்யன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பலர் தங்கள் பெயரில் ஒரு மனு தாக்கல் செய்வதோடு, பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தனியாக ஒரு விருப்ப மனுவையும் அளித்து வருகின்றனர்

. இதன் உச்சமாக, ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி. கஜேந்திரன், எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் எனக் கூறி, ஒரு தொகுதிக்கு ரூ.15,000 வீதம் மொத்தம் ரூ.18 லட்சம் வரைவோலை செலுத்தி விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளார். தனது ஆரணி தொகுதியிலும் தான் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

இதுபோன்று பல தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருவதால், கட்சியில் அவருக்கு உள்ள ஆதரவு தெளிவாகத் தெரிகிறது. இன்று விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், தலைமை அலுவலகத்தில் இன்னும் அதிக கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், தேர்தல் கூட்டணி குறித்தும் அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நேற்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம்” என்று திறந்த அழைப்பு விடுத்தார். இதனால் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: பீகார் மாடலில் ஸ்கெட்ச்! பழனிசாமி பின்னால் RSS தலைவர்கள்! அதிமுக, பாஜகவின் அடுத்த மூவ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share