ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...!
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்கு மிக நீளமான ஊழல் பட்டியலை தெரிவித்திருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சரி அமித் ஷா 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரிடம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்கு மிக நீளமான ஊழல் பட்டியலை தெரிவித்திருக்கிறார்.
- ரூ.39,775 கோடி மதிப்புள்ள மதுபான ஊழலில் FL2 உரிமங்களில் முறைகேடுகள், பார் டெண்டர்கள், அதிக கட்டணம் வசூலித்தல், சட்டவிரோத விற்பனை மற்றும் பாட்டில் கொள்முதல் மோசடி ஆகியவை அடங்கும்.
- அனுமதிக்கப்பட்ட 4.9 ஹெக்டேருக்குப் பதிலாக 105 ஹெக்டேர் சுரண்டப்பட்டது. இது 30 மடங்கு அதிகம் ஆகும்.
- எரிசக்தி ஊழலில், திமுக வழங்கிய ஒப்பந்தங்கள் மூலம் ரூ.4,400 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது.
- எல்காட் ஊழலில் ரூ. 3,000 கோடி பொது நிறுவன பங்குகள் ஒரு தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
- போலி டேப் பொருத்துதல் சான்றிதழ்களில் ரூ.2,000 கோடி போக்குவரத்துத் துறை ஊழல்.
- பெண்களுக்கான ஊட்டச்சத்து கருவிகளை உண்மையான விலையை விட 4–5 மடங்கு விலையில் கொள்முதல் செய்து, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக ரூ.450 கோடி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகையின் போது ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையில் கூட ரூ.60 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது.
- MGNREGA ஊழலில், ஒரு பயனாளி வீதம் ரூ.41,503 கையாடல் செய்யப்பட்டுள்ளது.
பின்னர், திமுகவில் கோஷ்டிகள் உள்ளன. தமிழ்நாட்டு அரசின் அதிகார மையம் தலைமை செயலகத்திற்கு வெளியே உள்ளது. சபரீசனா, மகனா, கனிமொழியா, இல்லை... வேறு யாராவதா - யாரை பின்பற்றுவது என்று திமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் உள்ளது. அதனால் தான் திமுக ஒன்றுமில்லாத பிரச்னைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறது எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமித் ஷா அவ்வளவு சொல்லியும் அடக்காத அண்ணாமலை... அப்செட்டில் நயினார் நாகேந்திரன்...!
இதையும் படிங்க: "எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது " - அமித் ஷாவுக்கு சவால் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்...!