×
 

அன்புமணிக்கு போட்டியாக களமிறங்கிய ராமதாஸ்... சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டம்!

அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முகுந்தன் பரசுராமன், ராமதாஸின் மகள்வழிப் பேரன். அன்புமணி ராமதாஸின் அக்காவான காந்திமதி - பரசுராமன் தம்பதியினரின் மகன் தான் முகுந்தன். பாமகவில் மாநில ஊடகப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்த முகுந்தன், அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டார். இது அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. கட்சியே இரண்டாக உடையும் சூழலுக்கு சென்ற நிலையில், ராமதாஸ் - அன்புமணி மோதலை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் பதவியை முகுந்தன் ராஜினாமா செய்தார்.

அன்று முதல் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் இருவரும் இரு துருவங்களாக மாறிவிட்டனர். கட்சியை தூண்டாடி தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களையும் பொதுக்குழு கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.  ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை முற்றி வருகிறது.

அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் இணைந்து பணியாற்றும் சூழல் நிலவாத நிலையில், அன்புமணிக்கு போட்டியாக ராமதாசும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள பாமக நிறுவனதாஸ் முடிவு செய்துள்ளார். கிராமங்களை நோக்கி பயணம் என்ற பெயரில் தனது சுற்றுப்பயணத்தை ராமதாஸ் தொடங்குகிறார்.

இதையும் படிங்க: அன்புமணியை அழிக்கத் துடிக்கும் சுசீலா?... ரகசிய படங்களை வெளியிட்டது யார்? - பாமகவில் புது பூகம்பம்..!

இன்று செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் கிராம கூட்டத்தில் ராமதாஸ் பங்கேற்க இருக்கிறார். ஏற்கனவே அன்புமணி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது அவருக்கு போட்டியாக ராமதாஸும் கிராமங்களை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இதையும் படிங்க: பாமகவில் இருந்து அன்புமணி தற்காலிக சஸ்பெண்ட்?... சாட்டையை சுழற்ற முடிவெடுத்த ராமதாஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share