×
 

26 நிமிடத்தில் ஜோலியை முடித்த ராமதாஸ்... செம்ம அப்செட்டில் அன்புமணி அண்ட் கோ...!

ஆனால் இந்த மாநாட்டில் பங்கேற்ற அனைத்து பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் அதிருப்தி மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது. ஏனெனில் மாநாட்டில் பேசிய ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் முன்வைத்த மாறுபட்ட கருத்துகள் தான் அதற்கு காரணம். 

பாமகவின் சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அடுத்த திருவிடந்தையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.கிட்டத்தட்ட லட்சக்கணக்கான பாமக தொண்டர்கள், நிர்வாகிகள் ஆவலுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக வர உள்ள 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்பது குறித்து அறிவிப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளவே அனைத்து பாமக தொண்டர்களும் ஆவலுடன் வந்திருந்தனர். ஆனால் இந்த மாநாட்டில் பங்கேற்ற அனைத்து பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் அதிருப்தி மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது. ஏனெனில் மாநாட்டில் பேசிய ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் முன்வைத்த மாறுபட்ட கருத்துகள் தான் அதற்கு காரணம். 


கூட்டணி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போர் நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வரும் அதே நேரத்தில் ராமதாஸ் திமுகவிடம் நேசக்கரம் நீட்டுவதாக கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையிலேயே இந்த மாநாட்டில் இருவருடைய பேச்சும் அமைந்தது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து பேசிய அன்புமணி திமுக அரசைக் கடுமையாக விமர்சித்தார். சுமார் 42 நிமிடத்திற்கு உரையாற்றிய அவர் வன்னிய மக்களை திமுக அரசு வஞ்சித்துவிட்டதாகவும், துரோகம் செய்துவிட்டதாகவும் சகட்டு மேனிக்கு சாடினார். 

இப்படி திமுகவை அன்புமணி பயங்கரமாக அட்டாக் செய்து பேசியிருந்த நிலையில், அடுத்ததாக பேசிய ராமதாஸ் திமுகவிடம் நெருக்கம் காட்டுவது போலத் தான் பேசினார். கடந்த காலங்கள்ல வந்து திமுக அரசை கடுமையாக  விமர்சனம் செஞ்ச ராமதாஸ். வன்னியர் மாநாட்டு மேடையில் பேசுறப்போ, தம்பி ஸ்டாலின் அவர்களுக்கு வந்து நான் கோரிக்கை வச்சேன். கோட்டைக்கு போனேன். இந்த ஊமையற்ற ஜனங்களுக்கு நீங்க ஏதாச்சு பண்ணனும். இந்த குரலற்ற ஜனங்கள் வந்து ரொம்ப கஷ்டப்படுறாங்க அப்படின்னு தம்பி ஸ்டாலின் கிட்ட சொன்னேன் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டார். 

இதையும் படிங்க: உங்க கணக்கை முடிச்சிடுவேன் - வன்னியர்களை எச்சரித்த ராமதாஸ்...! 

தன்னோட 26 நிமிட உரையில் ராமதாஸ் தம்பி ஸ்டாலின் அப்படின்னு பேசின அந்த வார்த்தை அன்புமணியையும், அவரது ஆதரவாளர்களையும் மிகுந்த வருத்தமடையச் செய்திருக்கிறது. இப்படி கட்சியோட இரண்டு முக்கிய புள்ளிகளும் வேறு, வேறு மாதிரியான கருத்துக்களை தெரிவித்திருப்பது. வர உள்ள தேர்தல் கூட்டணிக்காக இருவரும் மாற்றி, மாற்றிப் போடும் கூட்டணி கணக்கை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 
 

இதையும் படிங்க: 'கலைஞரை அடக்கம் செய்ய இடம் பிடித்து கொடுத்தவர் ராமதாஸ்' - ஸ்டாலினை கிழிகிழியென கிழித்த வழக்கறிஞர் பாலு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share