×
 

ராஜ்யசபா எம்.பி., தேர்தல்!! சட்டசபை தேர்தலுக்கு முன்னாடி இத பேசி முடிங்க!! பதவிகளை பங்கு போட காத்திருக்கும் கட்சிகள்!

தமிழகத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்கள், ஆறு பேரின் பதவி, அடுத்த ஆண்டு ஏப்., 1ல் காலியாகிறது.

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் 2026 ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைகிறது. அதிமுகவைச் சேர்ந்த எம். தம்பிதுரை, தமாகாவைச் சேர்ந்த ஜி.கே. வாசன், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, அந்தியூர் பி. செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு ஆகியோரே அந்த உறுப்பினர்கள்.

2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே ராஜ்யசபா தேர்தலை நடத்தினால், தற்போதைய சட்டசபை உறுப்பினர்கள் அடிப்படையில் திமுக கூட்டணிக்கு நான்கு இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தேர்தல் நடத்தினால், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து இடங்கள் மாறுபடும்.

முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதால், திமுக - அதிமுக அணிகளுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே, "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்" என்ற எண்ணத்தில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே ராஜ்யசபா தேர்தலை நடத்த விரும்புகின்றன திமுகவும் அதிமுகவும். இதற்கேற்ப, தேர்தல் ஆணையம் முன்கூட்டியே தேர்தலை நடத்த ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: திமுக இளைஞரணியில் இருந்து களமிறங்கும் வேட்பாளர்கள்! உதயநிதி ஸ்டாலின் வீட்டில் நடந்த தடபுடல் விருந்து!

இதற்கிடையில், அதிமுகவிடம் உள்ள இரண்டு ராஜ்யசபா இடங்களை பாஜக மற்றும் தமாகா கோருகின்றன. அதேநேரம், என்டிஏ கூட்டணியில் பாமக, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகளை இணைக்க பாஜக முயற்சி செய்கிறது. இந்தக் கட்சிகளும் கூட்டணி பேரத்தில் ராஜ்யசபா இடங்களை கோருகின்றன. பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் இருந்து இடங்கள் கேட்டு பேரம் பேசும் திட்டமும் உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளும் ராஜ்யசபா இடங்களுக்கு வலியுறுத்துகின்றன. எனவே, கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்தை சமாளித்து ராஜ்யசபா தேர்தலை சந்திப்பது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் 72 ராஜ்யசபா இடங்கள் விரைவில் காலியாகின்றன. பதவிக்காலம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றாலும், முன்கூட்டியே 2026 மார்ச் மாதமே நடத்தலாம். 

கடந்த 1996-ல் ஜெயலலிதா ஆட்சியில் சட்டசபைத் தேர்தலுக்கு முன் ராஜ்யசபா தேர்தல் நடத்தப்பட்டு அதிமுகவுக்கு ஐந்து இடங்களும் காங்கிரஸுக்கு ஒரு இடமும் கிடைத்தது போன்ற முன்னுதாரணங்கள் உள்ளன. இதனால், தமிழகம் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே ராஜ்யசபா தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: 10 சீட் வேணும்!! விஜயுடன் பேரத்தை துவங்கிய ஓபிஎஸ்! அதிமுக - பாஜக கூட்டணிக்கு கல்தா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share