பாஜக தேசிய தலைவருக்கு கூடுதல் பவர்!! ராஜ்யசபா எம்.பி ஆகிறார் நிதின் நபீன்! BJP-யின் மாஸ்டர் ப்ளான்!
பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபினுக்கு மற்றொரு முக்கிய அந்தஸ்தை வழங்கும் வகையில், ஜார்க்கண்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு அவரை அனுப்பி வைக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) 12-வது தேசிய தலைவராக பீஹாரைச் சேர்ந்த நிதின் நபின் (45) ஜனவரி 20, 2026 அன்று பொறுப்பேற்றார். இதன்மூலம் கட்சியின் வரலாற்றில் மிக இளம் வயதில் தேசிய தலைவரான பெருமையைப் பெற்றுள்ளார்.
ஜெ.பி. நடாவிடமிருந்து பொறுப்பைப் பெற்ற அவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களால் வாழ்த்தப்பட்டார். பிரதமர் மோடி, "கட்சி விவகாரங்களில் நிதின் நபின் எனது 'பாஸ்'" என்று கூறி அவரது தலைமையில் நம்பிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், பாஜக மேலிடம் நிதின் நபினுக்கு மேலும் முக்கிய அந்தஸ்து வழங்கும் வகையில் ராஜ்யசபா எம்.பி. பதவியை வழங்க முடிவு செய்துள்ளது. தேசிய தலைவராக இருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது சொந்த மாநிலமான பீஹாரில் ராஜ்யசபா இடம் காலியாக இல்லாததால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து அவரை அனுப்புவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தி.குன்றம் தீபத்தை எதிர்ப்பவர்களுக்கு அரசியலில் இடமில்லை!! பாஜ புதிய தேசிய தலைவர் வார்னிங்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து பாஜகவைச் சேர்ந்த தீபக் பிரகாஷின் ராஜ்யசபா பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்தில் முடிவடைகிறது. அவருக்கு பதிலாக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவர் ராஞ்சியில் பிறந்தவர் என்பதால் ஜார்க்கண்டுடன் தொடர்பு உள்ளது.
சில சிரமங்கள் இருந்தாலும், இந்த ஆண்டு மட்டும் 70 ராஜ்யசபா எம்.பி.க்கள் ஓய்வு பெற உள்ளதால், வேறு மாநிலங்களில் (பீஹார் அல்லாத) காலியாகும் இடங்களில் ஒன்றில் அவரை நிறுத்தி ராஜ்யசபா எம்.பி. ஆக்குவது உறுதியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், டெல்லியின் லுட்யன்ஸ் பகுதியில் VVIP-க்கள் வசிக்கும் இடத்தில் நிதின் நபினுக்கு அதிகாரப்பூர்வ பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. இது உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டுக்கு அருகில் உள்ளது. புனரமைப்பு பணிகள் முடிந்தவுடன் அவர் குடியேறுவார்.
தேசிய தலைவராக இருப்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கலாம் என்பதால், மத்திய அரசு அவருக்கு 'இசட்' (Z) பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆயுதமேந்திய வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பர்.
நிதின் நபின், பீஹாரில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றியவர். 2025 டிசம்பர் 14-ஆம் தேதி தேசிய பொதுச்செயலாளராக (Working President) நியமிக்கப்பட்ட பின்னர், இப்போது தேசிய தலைவராக உயர்ந்துள்ளார்.
இந்த நியமனம் பாஜகவில் தலைமை மாற்றத்தையும், இளம் தலைமுறைக்கு வாய்ப்பு அளிப்பதையும் காட்டுகிறது. வரும் 2029 லோக்சபா தேர்தல் உள்ளிட்ட பல முக்கிய சவால்களை எதிர்கொள்ள அவரது தலைமை முக்கியமானது என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: இவர் தான் எனது பாஸ்!! மோடி அறிமுகப்படுத்திய நபர்!! தலைவர்கள் மாறலாம்! கொள்கை மாறாது என சூசகம்!