மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!! மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!
''மக்கள் எழுச்சியை பார்க்கும் போது மேற்குவங்கத்தில் பாஜ ஆட்சி மலரும். பெரிய மாற்றம் நிகழ போகிறது'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஹால்தியா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். “மக்கள் எழுச்சியைப் பார்க்கும்போது மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி மலரும். பெரிய மாற்றம் நிகழப் போகிறது” என்று அவர் உறுதியாகக் கூறினார்.
ஹால்தியாவில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மேற்கு வங்க மக்கள் திரிணமுல் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்ற ஆவலுடன் உள்ளனர். இந்தத் தேர்தல் சாதாரணத் தேர்தல் அல்ல. இது மாநிலத்தின் பெருமையை மீட்டெடுப்பதற்கான தேர்தல். வளர்ச்சியடைந்த மாநிலத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் தேர்தல். இரக்கமற்ற திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்றும் தேர்தல்” என்றார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு மாநில வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியதாகக் குற்றம் சாட்டிய மோடி, “இந்தியா உலகின் அதிவேக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. பல மாநிலங்கள் முன்னேற்றப் பாதையில் செல்லும்போது, திரிணமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தை பின்னுக்கு இழுத்துச் செல்கிறது.
இதையும் படிங்க: பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா!! தாமதம் துரதிர்ஷ்டவசமானது!! மோடி உருக்கம்!
ஊடுருவல் அதிகரித்துள்ளது. மாநில மக்களே வேலை தேடி அந்தமான், ஒடிசா உள்ளிட்ட இடங்களுக்கு குடிபெயர்கின்றனர். ஒரு காலத்தில் நாடு முழுவதிலும் இருந்து மக்கள் வேலைக்காக ஹால்தியாவுக்கு வந்தனர். இன்று இங்குள்ள இளைஞர்கள் வெளியேறுகின்றனர்” என்று விமர்சித்தார்.
திரிணமுல் காங்கிரஸ் போலி ஆவணங்கள் தயாரிப்பதில் பெயர் பெற்றது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் இந்த உரத்த பிரசாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை நோக்கி அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: பாக்., இசைக்கு ஏற்ப பாட்டு பாடும் காங்.,!! அசாம் பிரசாரத்தில் பிரதமர் மோடி அனல் பேச்சு!