×
 

பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா!! தாமதம் துரதிர்ஷ்டவசமானது!! மோடி உருக்கம்!

'சட்டசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயம். இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் மிகுந்த துரதிர்ஷ்டவசமானது,' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடில்லி: சட்டசபைகளிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த முக்கிய மசோதாவை விரைவாக நிறைவேற்ற வரும் ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்றம் சிறப்புக் கூட்டத்தொடருக்கு கூடுகிறது. 

இதை வெறும் சட்ட நடவடிக்கையாக மட்டும் பார்க்காமல், நாட்டின் கோடிக்கணக்கான பெண்களின் நீண்டகால ஆசையின் பிரதிபலிப்பாகக் கருத வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “பெண்கள் முன்னேறும்போது சமூகமே முன்னேறுகிறது. இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள். தேசத்தின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு மகத்தானது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாக்., இசைக்கு ஏற்ப பாட்டு பாடும் காங்.,!! அசாம் பிரசாரத்தில் பிரதமர் மோடி அனல் பேச்சு!

இன்று அறிவியல், தொழில்நுட்பம், தொழில் முனைவோர், விளையாட்டு, இசை, கலை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். கல்வி மற்றும் சுகாதாரத்திலும் பெண்களுக்கான வசதிகள் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அரசியல் துறையில் அவர்களின் பிரதிநிதித்துவம் இன்னும் போதுமான அளவில் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

2029 லோக்சபா தேர்தலும், அதன் பிறகு நடைபெறும் மாநில சட்டசபைத் தேர்தல்களும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டுடன் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். “சட்டசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயம். இதில் ஏற்படும் எந்த தாமதமும் மிகுந்த துரதிர்ஷ்டவசமானது” என்று அவர் குறிப்பிட்டார். இந்த முடிவை தாமதப்படுத்துவது ஜனநாயகத்தின் வலிமையையே தாமதப்படுத்துவதாகும் என்றும் அவர் சொன்னார்.

இது எந்த ஒரு அரசுக்கோ அல்லது கட்சிக்கோ சொந்தமானது அல்ல, முழு தேசத்துக்கும் சொந்தமானது என்று பிரதமர் விளக்கினார். நமது பெண் சக்திக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இது. எனவே கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி எம்.பி.க்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வேகம் பெறும் என்ற நம்பிக்கையை பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார். ஏப்ரல் 16 முதல் நடைபெறும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகள் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு!! நமது இலக்கு 2047!! பிரதமர் மோடி சூளுரை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share