×
 

கரூர் துயரம்... என்ன நடந்துச்சு? சிபிஐ விசாரணைக்கு மார்ச் 17ல் ஆஜராகுவதாக செந்தில் பாலாஜி விளக்கம்..!!

கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு மார்ச் 17ஆம் தேதி ஆஜராக இருப்பதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் மக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இப்படி ஏராளமானவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதே வழக்கில் திமுக கரூர் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரப்பட்டது. 

இதையும் படிங்க: “அவர்களுக்கு பழக்கம் எங்களுக்கு வழக்கம்...” - ரைமிங்காக பேசி பாஜகவை விளாசிய நாஞ்சில் சம்பத்...!

இந்த நிலையில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருப்பதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: டெல்லிக்கு வர முடியாது?... அமித் ஷாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த விஜய்... காற்றில் பறந்த சிபிஐ சம்மன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share