×
 

மகன், பேரன், மனைவியுடன் சென்று வாக்களித்த மு.க.ஸ்டாலின்... மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களிப்பு...! 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். 

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு இன்று (ஏப்.23) சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. மொத்தமாக 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் தங்களது குடும்பத்துடன் சென்று வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோரைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனநாயக கடமையாற்றினார். சேலம் சிலுவம்பாளையத்தில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார். குடும்பத்தினருடன் சென்று, எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது வாக்கை செலுத்தினார்.

இதையும் படிங்க: விடிந்ததுமே களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்... வேளச்சேரி, சோழிங்கநல்லூரில் “வாக்கிங்” பிரசாரம்...!

சென்னை தேனாம்பேட்டையில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள SIET கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு முதல்வர் ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் வருகை தந்தனர்.  மக்களோடு மக்களாக குடும்பத்துடன் வரிசையில் நின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாக்கினை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து  அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வாக்கு செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின் உடன் வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனவி கிருத்திகா மற்றும் பேரன் இன்பநிதி ஆகியோரும் வாக்கு செலுத்தினர்.
 

இதையும் படிங்க: நாடே அதிர அறிவித்த மு.க.ஸ்டாலின்... “கிழிச்சி எடுப்பேன்” - அதிமுக, பாஜகவுக்கு எதிராக அதிரடி சவால்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share