×
 

"நன்றி சொல்ல வந்தேன்"... திருச்சி கிழக்கு மக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு..!!

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் விஜய் திருச்சிக்கு சென்றடைந்தார்.

தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக மே 10 அன்று பதவியேற்றார். அவரது முதல் பொதுப் பங்கேற்பு நிகழ்வாக, தான் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு இன்று திருச்சி சென்றார்.

இது அவரது பதவியேற்புக்குப் பிறகான முதல் பெரிய பொதுக் கூட்டமாகவும் கருதப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 91,381 ஓட்டுகள் பெற்று, தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜை 27,416 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.

பின்னர் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை விட்டுக்கொடுத்ததால், அங்கு இடைத்தேர்தல் வரவிருக்கிறது. இந்நிலையில், அந்தத் தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கவும், அவர்களின் ஆதரவுக்கு பதிலளிக்கவும் முதலமைச்சர் விஜய் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். 

இதையும் படிங்க: "பெண்களுக்கு உந்துசக்தி"... உச்ச நீதிமன்ற நீதிபதியாகிய வழக்கறிஞர் மோகனா... முதல்வர் விஜய் வாழ்த்து..!

சென்னையிலிருந்து தனி விமான மூலம் முதல்வர் விஜய் திருச்சி வந்தடைந்தார். அங்கிருந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுவதற்காக சாலை மார்க்கமாக புனித ஜோசப் கல்லூரிக்கு புறப்பட்டார். திருச்சி வந்தடைந்த முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ரமேஷ், துணை சபாநாயகர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சி நடைபெற உள்ள புனித ஜோசப் கல்லூரிக்கு புறப்பட்டார். முதல்வர் விஜய்க்கு காவல்துறை மரியாதை கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share