கல்யாண வீட்டுல கூட கதறல் தான்..! 100 யூனிட் ஜெ. மேடம் குடுத்தது... திமுகவை பந்தாடிய முதல்வர் விஜய்..!
திருச்சியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முதல்வர் விஜய் உரையாற்றினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் உரையாற்றினார். அப்போது, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கமும் நன்றிகளும் என்று தெரிவித்தார். குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் அனைவருக்கும் தன்னுடைய ஸ்பெஷல் வணக்கமும் ஸ்பெஷல் நன்றிகளும் எனக் கூறினார்.
தேர்தல் விதிகள் படி தான் நான் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ என்றும் தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு திருச்சி எப்படி ஒரு இதயம் போலவோ அதேபோல தன் இதயத்திற்கும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களும் மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை என்றும் ஆறு மாதம் அமைதியாக இருப்போம் என்று கூறியவர்களால் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை என்று தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்தில் ஆரம்பித்து விட்டார்கள் என்றும் பாவம் கல்யாண வீட்டில் எல்லாம் புலம்பி கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி இல்லாத சட்டமன்றம்..! இந்த நிமிஷத்துக்காகவே காத்திருந்தேன்..! அமைச்சர் ரமேஷ் நெகிழ்ச்சி..!!
நான் சொன்னதெல்லாம் நடக்கிறதா என்றும் கேட்டுள்ளார். இத்தனை வருடங்களாக மாற்றி மாற்றி உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்த இந்த இரண்டு பேரையும் ஒதுக்கிவிட்டு உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த உங்கள் விஜய்யை, உங்கள் அண்ணனை, உங்கள் தம்பியை முதலமைச்சர் ஆக இல்லை முதல் சேவகன் ஆக ஆகியிருக்கிறீர்கள் என்று கூறினார்.
தலைவணங்கி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் ஆதரவு தெரிவித்த அத்தனை இயக்கங்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். 100 யூனிட் இலவசம் மின்சாரம் ஸ்டாலின் கொடுத்தது இல்லை என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்தது என்றும் குறிப்பிட்டு பேசினார். ஆனால் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிக்கையாக விட்டுத் தள்ளியதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "நன்றி சொல்ல வந்தேன்"... திருச்சி கிழக்கு மக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு..!!