×
 

வளர்ச்சியடைந்த இந்தியா எனும் கனவை நனவாக்குவோம்! நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி சூளுரை!

மத்திய அரசின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டமான நிடி ஆயோக் கூட்டம், புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூன் 11) நடைபெற்றது.

புதுடெல்லியில் இன்று (ஜூன் 11) மத்திய அரசின் மிக முக்கிய ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு மாநிலங்களின் நிதித் தேவைகள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு சார்ந்த விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்திப் பேசினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்துக்குப் பிறகு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படத்தில் தமிழக முதல்வர் விஜய் முன் வரிசையில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னர் பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து, “நிதி ஆயோக் குழுவின் 11வது கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன். கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜூன் 11ல் முதல்வர் விஜய் டெல்லி பயணம்!! நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு! விட்டதை பிடிக்க திட்டம்?!

இந்தக் கூட்டம் மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்தது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் நிதித் தேவைகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து தங்கள் கருத்துகளை முன்வைத்தன. முதல்வர் விஜய்யின் பங்கேற்பு தமிழகத்தின் நலன்களை மத்திய அரசுக்கு தெளிவாக எடுத்துரைக்க உதவியதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம், மத்திய-மாநில உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கூட்டுறவு கூட்டாட்சி முறையை வலியுறுத்திய பிரதமரின் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழக முதல்வர் விஜய்யின் முன் வரிசை இடம் மற்றும் செயல்பாடுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 

இதையும் படிங்க: தவெக தாவியவர்கள் பதவி இல்லாமல் தவிப்பு! விஜய் கொடுத்த ப்ராமிஸ்! இடைத்தேர்தலுக்கு பிறகு இருக்கு சம்பவம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share