×
 

மாநில அரசு சரியா இருந்தா ஆளுநர் ஏன் ஆய்வுக்கு வராரு?... விஜய் அரசுக்கு செக் வைத்த காங்கிரஸ் முக்கிய புள்ளி...!

 மாநில அரசு அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவது குறித்து கேட்டதற்கு மாநில அரசு சரியாக செய்தால் ஆளுநர் ஏன் அதில் தலையிடப் போகிறார்

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,   கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் அங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு குரலில் ஒலிக்கின்றன .  அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பிரம்மாண்டமான அளவில் விமான நிலையமும் துறைமுகமும் ஒன்றிய அரசு காட்டை அழித்து உருவாக்க திட்டமிட்டுள்ளது இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது அதற்கு மாறாக அதானி என்ற தனி நபருக்கு உறுதுணையாக அமையும் எனவே தான் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைய உள்ள துறைமுகத்திற்கும் விமான நிலையத்திற்கும் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார் .

 மாநில அரசு அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவது குறித்து கேட்டதற்கு மாநில அரசு சரியாக செய்தால் ஆளுநர் ஏன் அதில் தலையிடப் போகிறார். அப்படியானால் மாநில அரசு சரியாக வேலை செய்யவில்லை என கேட்டதற்கு மாநில அரசு சரியாக வேலை செய்தால் ஆளுநர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என எதிர் கேள்வி எழுப்பினார் .

 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார்கள் இது குதிரை பேரம் இல்லையா ? என செய்தியாளர்கள் கேட்டதற்கு விஜய் இதில் நியாயமாக நடந்து கொள்கிறார் என்றும் எம்எல்ஏ பதவியோடு கட்சியில் சேர்க்கவில்லை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்ட பின்பு தான் கட்சியில் சேர்க்கிறார் எனவே இதில் குதிரை பேரம் கழுதை பேரம் இல்லை என அழகிரி தெரிவித்தார்.

இதையும் படிங்க: "SOFA MODEL அரசு"..! பொய் வழக்குகளால் திமுகவை முடக்க முடியாது..! உதயநிதி ஆவேசம்..!!

 நீட் தேர்வை பொறுத்தவரை அது அந்தந்த மாநிலங்களின் தேவைக்கு விட்டு விட வேண்டும் நீட் தேர்வு தேவை எனும் சொல்லும் மாநிலங்கள் நீட் தேர்வு பயன்படுத்திக் கொள்ளலாம் நீட் தேர்வு தேவையில்லை என கூறும் மாநிலங்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை . ஆனால் பாஜக அரசு அவ்வாறு செய்யாமல் உள்ளது .  கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றில் ஆஜர் ஆவதற்க்காக கே எஸ் அழகிரி இன்று கும்பகோணத்திற்கு வந்திருந்தார் .

இதையும் படிங்க: மாறுவேடத்தில் களமிறங்கிய பாஜக... மறுக்காமல் வழிவிட்ட விஜய்... ஆளுநர் ஆய்விற்குள் மறைந்திருக்கும் திடுக்கிடும் உண்மை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share