×
 

“நிர்மலா சீதாராமன் முதல்வர், இபிஎஸ், விஜய் துணை முதல்வர்” - அமித் ஷாவின் அதிரடி கணக்கு - முக்கிய அரசியல் புள்ளி தகவல்...!

விஜய்க்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதைத் தவிர வேறு வழியில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணிக்குள் விஜய் வருவாரா? என்ற சந்தேகம் நீடித்து வரும் நிலையில், அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதைத் தவிர வேறு வழியில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான பீட்டர் அல்போன்ஸ் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் பீட்டர் அல்போன்ஸ். தமிழக அரசியலில் முதிர்ச்சியான அனுபவம் கொண்ட அவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக கணித்துக்கூறியுள்ளார். 

விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், ஆனால் அது அரசியல் சக்தியாக மாறுமா? அதனைக் கட்டமைக்கும் தகுதி அவரது தொண்டர்களிடம் இருக்கிறதா என்பது தெரியவில்லை எனக்கூறியுள்ளார். 

இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் பதவி பறிப்பு? - அடுத்தடுத்து குவியும் சர்ச்சை வீடியோக்கள்... சாட்டையைச் சுழற்ற தயாராகும் விஜய்...!

காங்கிரஸ் உடன் விஜய் கூட்டணி வைக்க உள்ளதாகவும், இதுதொடர்பாக ராகுல் காந்தியுடன் விஜய் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பாஜக - அதிமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்பிருப்பதாக பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தவெகவின் இமேஜ் டெமேஜ் ஆகியுள்ளதால், களத்திற்கு சென்று மக்களை சந்திக்க தவெக தொண்டர்கள் தயங்குகின்றனர். எனவே வர உள்ள தேர்தலை கூட்டணியுடன் எதிர்கொண்டால் நன்றாக இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பீகார் தேர்தல் களத்தை சுட்டிக்காட்டிய பீட்டர் அல்போன்ஸ், பீகார் சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு முடியும் வரை நிதிஷ்குமார் தான் முதலமைச்சர் வேட்பாளர் எனக்கூறி வந்த அமித் ஷா. தொகுதி பங்கீடு முடிந்ததும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தான் முதல்வரைத் தேர்வு செய்வார்கள் எனக்கூறி நிதிஷ்குமாருக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். 

தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் முடியும் வரை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என அமித் ஷா பிரச்சாரம் செய்வார் என்றும், அதன் பின்னர் நிர்மலா சீதாராமனை முதல்வராகவும், எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜயை துணை முதல்வராகவும் அமித் ஷா அறிவிக்க வாய்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க அதிமுக தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கொள்கை எதிரியான பாஜகவுடன் இருப்பதால் அதிமுக கூட்டணிக்குச் செல்ல விஜய் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக கூட்டணியைக் கழட்டி விட எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கரூர் விவகாரத்தில் தவெகவிற்கு உதவிய பாஜக சீக்கிரம் கூட்டணிக்குள் வந்து சேரும் படி விஜய்க்கு கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி விஜய் கூட்டணிக்குள் இணைந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு கல்தா கொடுக்கவும் அமித் ஷா தயங்கமாட்டார் எனக்கூறப்பட்டது. இப்படி பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மூத்த அரசியல்வாதியான பீட்டர் அல்போன்ஸின் ஓபன் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: கரூர் ஆறாத வடுக்கள்... தவெகவினர் தீபாவளி கொண்டாட வேண்டாம்... கட்சி தலைமை அறிவுறுத்தல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share