×
 

“கோமியத்தை நானும் விஜயகாந்தும் கூட”... அடுத்தவர் உரிமையில் தலையிடக்கூடாது - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்! 

கோமியத்தை குடிக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியது தனி மனிதனின் உரிமை அதில் யாரும் தலையிட முடியாது.கருத்து சொல்ல முடியாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

கோமியத்தை குடிக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியது தனி மனிதனின் உரிமை அதில் யாரும் தலையிட முடியாது.கருத்து சொல்ல முடியாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

சட்ட விரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடிய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த ஜகபர்அலி, குவாரி உரிமையாளர்களால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து  திருமயம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், மாட்டின் கோமியம் குறித்து பெரிய விவாதம் நடந்தது. கோமியத்தை குடிப்பது ஆரோக்கியம் என்று ஒரு குழுவும் அதைக் குடிக்க கூடாது என்று ஒரு குழுவும் பேசிக்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காத 33 லட்சம் பேர்.. திமுக அரசு மீது மக்களுக்கு கோபம்.. பிரேமலதா கணிப்பு!

என் கருத்தைப் பொறுத்த கோமியம் என்பது இந்துக்களால் புனிதமாக பார்க்கக்கூடிய ஒன்று இது அனைவருக்கும் தெரியும். உங்களுக்கு பிரியப்பட்டால் நீங்கள் அதனை குடியுங்கள் இல்லையென்றால் குடிக்காதீர்கள்... இதில் யாரையும் யாரும் வம்பு செய்ய முடியாது. 

இந்த உணவை தான் சாப்பிட வேண்டும் இதைத்தான் குடிக்க வேண்டும் இந்த கடவுளை தான் நீங்கள் வணங்க வேண்டும் என்று யாரும் யாரையும் வம்பு செய்ய முடியாது. அவரவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டால் இங்கு எதுவும் தப்பும் இல்லை தடையும் இல்லை. கோமியத்தை நானும் விஜயகாந்த்ம்கூட வாங்கி தலையில் தெளித்து உள்ளோம். எங்கள் வீட்டில் அனைவரும் செய்துள்ளனர். நாங்கள் வீட்டிலேயே மாடு வளர்க்கின்றோம். இது அவரவர்கள் நம்பிக்கை. அதனால் கோமியத்தை குடிக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியது தனி மனிதனின் உரிமை அதில் யாரும் தலையிட முடியாது கருத்து சொல்ல முடியாது.  

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் பாஜக குற்றச்சாட்டுகிறார்கள். எனது சிறிய வயதில் எங்கள் ஊரில் பெரியவர்கள் சொல்லி நானும் கேள்வி பட்டுள்ளேன், கண்ணில் ஊற்றலாம் வாய் பிரச்சனை என்றால் வாய் கொப்பளிக்கலாம் காலையில் எழுந்தவுடன் தனது சிறுநீரை தாங்களே குடித்தால் நோய்வராது என்று பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அப்போதே கூறினார். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதா? இதுவும் தனி மனித சுதந்திரம் தான்...யாரும் யாரையும் கட்டாய படுத்த முடியாது. 

இதே போல் தான் கோமிய விஷயமும். அவரவர்கள் சிறுநீரை அவர் அவர்களே குடிக்கலாம் என்ற கருத்து இருக்கு போது கோமியத்தை ஏற்றுக்கொள்ளலாமா கூடாதா என்பது தனிமனிதனின் விருப்பம் எனக்கூறினார். 


 

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் அறிவிப்பின் பின்னணி என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share