×
 

மு.க.ஸ்டாலின் அப்செட்! செல்வப்பெருந்தகை முயற்சி டோட்டல் வேஸ்ட்! திமுக - காங்., கூட்டணியில் பெரிய ஓட்டை!

த.வெ.க.,வுக்கு ஆதரவாக பேசி வரும் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி மீது, காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது.

தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சியில் அதிகாரப் பகிர்வு கோரி தமிழக காங்கிரஸ் தரப்பு முன்வைத்த கோரிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நிராகரித்துவிட்டார். இதனால் காங்கிரஸ் உள்ளே பெரும் அதிருப்தி நிலவுகிறது.

நேற்று சென்னை முகப்பேர் பகுதியில் நடந்த காங்கிரஸ் பேரணியில் கட்சியின் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் கலந்து கொண்டார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதை கண்டித்து இந்த பேரணி நடைபெற்றது. 

வேணுகோபாலை முதல்வர் ஸ்டாலினுடன் சந்திக்க வைக்கவும், தேநீர் விருந்து அளிக்கவும் காங்கிரஸ் ஒரு தரப்பு முயற்சி செய்தது. ஆனால் ஸ்டாலின் அதை விரும்பாததால் சந்திப்பு நடக்கவில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படிங்க: விஜய் ஆரம்பித்து வைத்த கோஷம்!! காங்., விடாப்பிடி! திமுக, கனிமொழியிடம் ராகுல்காந்தி பேரம்!!

வேணுகோபால் வருகை தெரிந்ததும், காங்கிரஸ் உரிமை மீட்பு குழு சார்பில் முகப்பேரில் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. “அதிகாரமற்ற அரசியல் அர்த்தமற்ற அரசியல்”, “வேண்டும் வேண்டும் ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி வேண்டும்”, “சுயமரியாதையை இழந்து கூட்டணி வேண்டாம்” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதை கண்ட தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள் அந்த போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். இது கட்சியின் உள்ளக மோதலை வெளிப்படையாகக் காட்டியது.

இதற்கிடையே, த.வெ.க.வுக்கு ஆதரவாக பேசி வரும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது. ஆனால் காங்கிரஸ் மேலிடம் அதை மறுத்துவிட்டது. இது தி.மு.க.வுக்கு எதிரான காங்கிரஸ் தரப்பின் அதிருப்தியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி உறவு எப்படி இருக்கும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. காங்கிரஸ் உள்ளே ஆட்சி பங்கு கோரும் குரல்கள் வலுத்து வரும் நிலையில், தி.மு.க. தரப்பு இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரு கட்சிகளுக்கும் இடையேயான பதற்றம் தொடர்ந்தால், வரும் சட்டசபை தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புது புகைச்சல்: தளபதி vs ஜோதிமணி!! சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share